தமிழ்த்தாய் பாடல் விவகாரம்… வழிக்கு வந்தது ஆர்பிஐ : நிதியமைச்சரை சந்தித்த கையோடு தடபுடலாக அறிக்கை வெளியீடு..!!

Author: Babu Lakshmanan
27 January 2022, 7:58 pm

தமிழ்த்தாய் அவமதித்தது தொடர்பான பிரச்சனை பூதாகரமான நிலையில், ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தின் போது சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி நிறுவன ஊழியர்கள், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கையில், எழுந்து நிற்காமல் அவமதித்துள்ளனர். இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

மேலும், தமிழக அரசும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் குறித்து அறிவிப்பாணையை மீண்டும் வெளியிட்டது. இதையடுத்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை ரிசர்வ் வங்கி நிர்வாகி சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது ;- ஜனவரி 26, 2022 அன்று இந்திய ரிசர்வ்‌ வங்கியின்‌ சென்னை மண்டல அலுவலகத்தில்‌ நடைபெற்ற எழுபத்தி மூன்றாவது குடியரசு தின கொண்டாட்டங்களின்‌ போது நிகழ்ந்த நிகழ்வுகளின்‌ தொடர்பில்‌ இது வெளியிடப்படுகிறது.

  1. குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்‌ கலாச்சாரம்‌ மற்றும்‌ மொழிக்கு மரியாதை செலுத்துவதன்‌ அடையாளமாக “தமிழ்த்தாய்‌ வாழ்த்து’ பாடல்‌ பாடப்பட்டது. எனினும்‌, பின்னர்‌ அதனைத்‌ தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில்‌ பாடல்‌ குறித்து சற்றும்‌ எதிர்பாராத மற்றும்‌ வருந்தத்தக்க சில தேவையற்ற கூற்றுகள்‌ எழுப்பப்பட்டன.
  2. தமிழ்த்தாய்‌ வாழ்த்து தமிழ்நாட்டின்‌ மாநிலப்‌ பாடல்‌ என்பதை நாங்கள்‌ உணர்கிறோம்‌. ஒரு ஒழுங்குமுறைப்படுத்தும்‌ அமைப்பு என்கிற முறையில்‌, தாங்கள்‌ நாட்டின்‌ ஒவ்வொரு பகுதியிலும்‌ பின்பற்றப்படும்‌ பழக்கவழக்கங்கள்‌ மற்றும்‌
    நடைமுறைகளை மதிக்கிறோம்‌ என்பதை மீண்டும்‌ தெரிவிக்க விரும்புகிறோம்‌.
  3. இந்திய ரிசர்வ்‌ வங்கி, சென்னை மண்டல அலுவலகத்தின்‌ பிரதிநிதிகள்‌, மண்டல இயக்குநர்‌ திரு. எஸ்‌.எம்‌.என்‌ சுவாமி அவர்களின்‌ தலைமையில்‌ மதிப்பிற்குரிய தமிழக நிதி அமைச்சர்‌ திரு. டாக்டர்‌ தியாக ராஜன்‌ அவர்களை சந்தித்து இதன்‌ தொடர்பான எங்கள்‌ நிலைபாட்டை உறுதி செய்தனர்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!