சனாதனம் குறித்து தவறாக பேசிய உதயநிதிக்கு தேர்தலில் பதிலடி கொடுங்க : பாதயாத்திரையில் மத்திய அமைச்சர் பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan16 October 2023, 5:10 pm
சனாதனம் குறித்து தவறாக பேசிய உதயநிதிக்கு தேர்தலில் பதிலடி கொடுங்க : பாதயாத்திரையில் மத்திய அமைச்சர் பேச்சு!!
2 கட்ட பாதயாத்திரையை நிறைவு செய்த அண்ணாமலை 3ம் கட்டமாக இன்று திருப்பூரில் அண்ணாமலை யாத்திரை தொடங்கினார். முன்னதாக அவருக்கு ஒரு வார கால ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது.
இதையடுத்து அண்ணாமலையின் பாத யாத்திரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட அண்ணாமலையின் பாத யாத்திரை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 3-வது கட்ட பாதயாத்திரையை தொடங்கும் நிகழ்வில் அண்ணாமலையுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எல் முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய பியூஷ் கோயல், சனாதன விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிக்க வேண்டும். பிரதமர் மோடி தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை உலக நாடுகளுக்கு கொண்டு செல்கிறார்.
ஊழலின் மொத்த உருவமாக உள்ள திமுக, காங்கிரசை தோற்கடிக்க வேண்டும். தமிழகம் விரும்பும் மாற்றத்தை அண்ணாமலை வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.