மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணிகளை புறக்கணிக்கும் வருவாய் துறை அலுவலர் சங்கம்.. போராட்டம் அறிவிப்பு..!!
Author: Udayachandran RadhaKrishnan22 October 2023, 11:39 am
மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணிகளை புறக்கணிக்கும் வருவாய் துறை அலுவலர் சங்கம்.. போராட்டம் அறிவிப்பு!!
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாநில நிா்வாகிகள் கூட்டம், கள்ளக்குறிச்சியில் அண்மையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்குத் தாமதமின்றி பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும், புதிய பணியிடங்களுக்காக ஏற்கெனவே உள்ள பணியிடங்களைக் களைக்க முற்படும் போக்கைக் கைவிட வேண்டும், இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளா் பெயா் மாற்ற விதி திருத்தம், பணி பாதுகாப்பு அரசாணை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக வருகிற 26-ஆம் தேதி முதல் மகளிா் உரிமைத் தொகை திட்டப் பணிகள் புறக்கணிக்கப்படும். அன்று மாலை 4.45 மணிக்கு வருவாய்த் துறை அலுவலா்கள் அலுவலகங்களில் இருந்து வெளிநடப்பு செய்து, மாவட்டத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தப் போராட்டங்களில் தீா்வு கிடைக்காவிட்டால், நவ. 21-ஆம் தேதி மாநில அளவில் வருவாய்த் துறை அலுவலா்கள் அனைவரும் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபடுவா் எனத் தெரிவித்தனா்.