வீட்டுக்கு வரும் விருந்தாளிகள்.. வருமான வரித்துறை சோதனையை கிண்டல் செய்த அமைச்சர் உதயநிதி!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 October 2023, 2:43 pm

வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் போல மாறிய வருமானத்துறை அதிகாரிகள்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!!!

சென்னையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சிப்பெற்ற மாணவர்களுக்கான பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி அவர்கள், நான் முதல்வன் திட்டம் கீழ் 1200 மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கியுள்ளேன். திமுகவுக்கு யார் போட்டி என்பதில் தான் எதிர்கட்சிகளிடையே போட்டி.

ஆளுநர் மற்ற மாநிலங்களுக்கு சென்று பார்க்கிறாரா என தெரியவில்லை. மற்ற மாநிலங்களை பொறுத்தவரையில் தமிழகத்தில் சாதி பாகுபாடு குறைவு தான். ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அவர் கூறுகையில், ஆசிரியர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், வருமானவரித்துறை சோதனை என்பது தினமும் நடப்பது போல் தான் உள்ளது. அவர்கள் தினமும் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் போல மாறி விட்டார்கள். சனாதனம் குறித்து ஆளுநரிடம் தான் கேட்க வேண்டும். சனாதனம் பற்றி தொடர்ந்து பேசுவேன் என தெரிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி