பழகுவதில் ஆர்என் ரவி நல்ல மனிதர்.. ஆனால் அவரது மனப்பான்மை.. ஆளுநரை சந்திப்பது குறித்து முதலமைச்சர் கருத்து!
Author: Udayachandran RadhaKrishnan16 December 2023, 1:25 pm
பழகுவதில் ஆர்என் ரவி நல்ல மனிதர்.. ஆனால் அவரது மனப்பான்மை.. ஆளுநரை சந்திப்பது குறித்து முதலமைச்சர் கருத்து!
பிரபல ஆங்கில நாளேடு, முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேட்டி எடுத்துள்ளது. இந்த நேர்காணலில், நீங்களும், ஆளுநரும் பேசிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆளுநரும் உங்களைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பு நன்மை பயக்கும் என நினைக்கிறீர்களா? என முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், நான் பல முறை ஆளுநரை சந்தித்து ஆலோசனைகள் நடத்தியுள்ளேன். நாங்கள் பல அரசு நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்து கொண்டிருக்கிறோம்.
அப்போதெல்லாம் அவர் என்னுடன் நல்ல முறையிலேயே பழகியுள்ளார். இங்கே சந்திப்பது என்பது பிரச்சினையே அல்ல. ஆளுநர் தனது மனப்பான்மையை மாற்றிக்கொண்டு மாநில நனுக்காக செயல்பட வேண்டும்.
மக்களுக்கும், மாநில வளர்ச்சிக்கும், மாநிலக் கொள்கைகளுக்கும் எதிரான சக்திகளின் கைகளில் கைப்பாவையாக இருப்பதை அவர் தவிர்த்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆதரவு தர வேண்டும் என கூறினார்.
முன்னதாக, அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு விசாரணை நடந்தபோது, தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தேநீர் சந்திப்பில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இது முற்றிலும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பானது. இது நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய விஷயம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.