ஒரே இரவில் 4 ஏடிஎம்களில் ரூ.75 லட்சம் கொள்ளை : டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2023, 4:36 pm

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கொள்ளையர்களை பிடிக்க தீவிர வாகன தணிக்கை மற்றும் தனியார் விடுதிகளில் சோதனை நடத்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இன்று காலை முதலே திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். மேலும், ஏடிஎம் கொள்ளை சம்பவம் நடந்த பகுதி, மாவட்ட எல்லைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து போலீசார் மாநில எல்லைகள் மற்றும் சுங்க சாவடிகளில் தீவிர வாகன சோதனை செய்யவும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கி உள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் விடுதிகளிலும் தீவிர சோதனை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கொள்ளையர்கள் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்றை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • My career gone after acted in Ajiths Veeram Movie வீரம் படத்துல நடிச்சு என்னோட கெரியரே போச்சு.. புலம்பும் நடிகை!