இனி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை.. தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan19 February 2024, 11:37 am
இனி மாணவர்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை.. தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்!!
நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது. பட்ஜெட் கூட்டத்தொடரை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு…
நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம்
பூவிருந்தவல்லியில் ரூ.500 கோடியில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்
உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்
கோவையில் பிரமாண்ட நூலகம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் அடுத்த 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்
மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்
அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ₹1000 உதவித்தொகை அளிக்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகம்
கோவையில் 20 லட்சம் சதுர அடியில் ₹1,100 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்
சென்னை விமானம் நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ விரிவாக்கம் செய்ய திட்ட அறிக்கை ; பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு அறிக்கை
பல்வேறு அம்சங்களை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் அறிவித்து வருகிறார்.