ரூ.4700 கோடி ஊழல்.. இனிமேல் தான் அமலாக்கத்துறை ஆட்டம் ஆரம்பம் : வானதி சீனிவாசன் பஞ்ச்..!!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2024, 1:54 pm
vanathi
Quick Share

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, தமிழகத்தின் இயற்கை வளம் மணல் கொள்ளை எப்படி நடைபெற்று வருகிறது என கவனிக்க தீர்மானம் அறிவித்திருந்தோம்

அறிவியல் ரீதியாக இதை ஆராய்ந்து தமிழகத்தில் 4700 கோடி ரூபாய் அளவில் கொள்ளையடிக்கப்படுகிறது அமலாக்கத் துறையினர் டி ஜி பி அலுவலகத்திற்கு கடிதம் அளித்துள்ளனர்

தமிழகத்தில் ஒரு புறம் வருமானத்திற்கு மதுபான கடைகள் அமைக்கப்படுகிறது மற்றொரு புறத்தில் மணல் கொள்ளை நடைபெறுகிறது

அரசாங்கத்திற்கு சரியான வருமானம் வராத நிலையில் நடுவில் இருக்கும் நபர்கள் பல நூறு கோடிகளை கைப்பற்றியுள்ளனர் , இதை பற்றி ஏன் மாநில அரசு பதில் அளிக்க வில்லை ?

மணல் கொள்ளை விசயத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் மணல் கொள்ளை சம்பவத்தின் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்

தமிழக அரசுக்கு நாங்கள் ஒரு கோரிக்கை வைக்கிறோம் நீர்வளத் துறை அனைத்து சட்டப்படி உறுப்பினர்களுக்கும் கொடுத்து தாலி கப்பில் வருங்காலத்தில் மணல் வைத்து இதுதான் மணல் என வருங்கால சங்கதியினருக்கு பட்டாத முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Views: - 128

0

0