இந்த கோவிலில் செல்போனுடன் வந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் : பக்தர்களுக்கு ஷாக் தந்த நிர்வாகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2023, 1:54 pm

தெரிந்தோ தெரியாமலோ கோவிலுக்குள் செல்போனை எடுத்து சென்றால் ரூபாய் 5000 அபராதம்

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தியில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்து வருகின்றனர்.

அவர்களில் சிலர் கோவிலுக்குள் செல்போன்களை எடுத்து செல்வதாகவும், அந்த செல்போன்களை பயன்படுத்தி கோவில் வளாகத்தில் வீடியோ, போட்டோ ஆகியவற்றை எடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் ஏற்பட்டுள்ளன.

இது தவிர கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் ஆகியோரும் செல்போன்களை எடுத்து சென்று பேசுகின்றனர். இதனால் பல்வேறு விரும்ப தகாத சம்பவங்கள் நடைபெறுகின்றன.

எனவே கோவிலுக்குள் இனிமேல் யாராவது செல்போனை எடுத்து சென்று பிடிபட்டால் அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உடனடி அபராதம் விதிக்கப்படும். அபராதம் கட்ட தவறினால் செல்போன் பறிமுதல் செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி