அண்ணாமலையிடம் சரண்டர் ஆன ஆர்எஸ் பாரதி… பதிலடி கொடுப்பதில் அந்தர் பல்டி…!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2023, 9:59 pm

தமிழகத்துக்கு காவிரி நீர் தரமறுக்கிறது கர்நாடக காங்கிரஸ் கட்சி. இப்படிப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் செல்லக் கூடாது. மீறி சென்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், மதுரையில் நடந்த கருணாநிதி நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பெங்களூருக்கு எங்கள் தளபதி வந்தால் முற்றுகை இடுவாயா? நீ ஒரு ஆண்மகனாக இருந்தால்.. உனக்கு தைரியம் இருந்தால்.. சோற்றில் உப்பு போட்டு தின்பவராக இருந்தால் தலைவர் வரும்போது தடுத்துப்பார்.

பிறகு நாங்கள் என்ன செய்வோம் என்று பார்ப்பாய். ஆடு ஆடாக இருந்தால் வைத்திருப்போம். இல்லையெனில் பிரியாணி போட்டு விடுவோம் என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கோவையில் நேற்று பேசிய அண்ணாமலை, தி.மு.க. தொண்டர்கள் என்னை பிரியாணி போட்டு விடுவார்கள் என்று ஆர்.எஸ்.பாரதி சொன்னதாக கேள்விப்பட்டேன். ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கும், அவரது வயதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூத்த அரசியல்வாதியான அவரது பேச்சில் தரம் இருக்க வேண்டும்.

இது அரிவாள் பிடித்த கை. கிலுவை மரத்தை அரிவாளால் வெட்டும் கை. அரிவாளை யார் பிடித்தாலும் வெட்டத்தான் செய்யும். அதுவும் விவசாயி பிடித்தால் நல்லாவே வெட்டும். ஆர்.எஸ்.பாரதி பயமுறுத்தி அரசியல் பண்ணிவிடாலாம் என்று நினைத்தால், அது என்னிடம் நடக்காது. ஒரு கன்னத்தில் அடித்தால், மற்றொரு கன்னத்தை காட்டுவதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. இதனை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர், இது மட்டும் எதை பிடித்த கை என்று கேட்டவர், சுதாரித்துக் கொண்டு இது பேனா பிடித்த கை. நான் வக்கீல் என்பதால் பேனாவை பிடித்த கை இது என்று சொல்லி சமாளித்தார்.

இந்த வீ டியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் நிலையில், அண்ணாமலையிடம் ஆர்.எஸ்.பாரதி சரண்டராகி விட்டார். இது மட்டும் எதைப் பிடித்த கை என்று கேட்க வந்தவர், அப்படியே அந்தர் பல்டி அடித்து இது பேனா பிடித்த கை என்று கூறியிருக்கிறார்.

இதிலிருந்து அண்ணாமலையை பார்த்து ஆர்.எஸ்.பாரதி பயப்படுகிறார் என்பது புலனாகிறது என்று கலாய்த்து வருகிறார்கள்.

  • Director Rv Udayakumar Talked About Vijay Politics Entryஇது மட்டும் இல்லைனா விஜய் கட்சியே ஆரம்பித்திருக்க முடியாது : புயலை கிளப்பிய இயக்குநர்!