ஆடு தானாக வந்து சிக்குது… ஆளுநர் ஆர்என் ரவி குறித்து ஆர்எஸ் பாரதி காட்டமான விமர்சனம்!!!

Author: Babu Lakshmanan
30 June 2023, 7:56 pm

போக்குவரத்து துறையில் பணமோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி செந்தில் பாலாஜயை கைது செய்வதாக அறிவித்தனர்.

இதையடுத்து நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 21 ஆம் தேதி அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் வகித்து வந்த துறைகள் தங்கம் தென்னரசு, முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும் அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படாமல் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என முதல்வர் ஸ்டாலின் அரசாணை வெளியிட்டார்.
இதற்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் நேற்றைய தினம் செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என தெரிவித்தனர்.
இந்த நிலையில் சில மணி நேரங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அறிவிப்பை ஆளுநர் நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து ஆளுநர் நீக்கிவிட்டார் என சொல்வதே தவறு. அவர் நோட்டீஸ்தான் வழங்கியுள்ளார்.

அந்த நோட்டீஸை முதல்வருக்கு அனுப்பியுள்ளார். நீக்கும் அதிகாரம் எல்லாம் ஆளுநருக்கு இல்லை. அவர் சட்டம் தெரியாமல் வலையில் மாட்டிக் கொள்ள போகிறார்.

ஏற்கெனவே உச்சநீதிமன்றம் இரு ஆளுநர்களுக்கு குட்டு குட்டியுள்ளது. இவரும் அதே மாதிரி கொட்டு வாங்கிக் கொண்டு போக போகிறார்.
இதை திராவிட முன்னேற்ற கழகம் சட்ட ரீதியாக சந்திக்கும்.

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மாநில சுயாட்சியை காக்கும் வகையில் இந்த வழக்கை திமுக நடத்தி தீர்ப்பை பெறும். கொலை குற்றம் சாட்டப்பட்ட அமித்ஷா, உள்துறை அமைச்சராக இருக்கிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு முடிந்து போன ஒரு வழக்கு. மத்தியில் அமைச்சர்களாக உள்ள 33 பேர் மீது வழக்குகள் இருக்கின்றன. அவர்கள் எல்லாம் ராஜினாமா செய்வார்களா?

பிரதமர் மோடி மீது குஜராத்தில் கொலை வழக்கு இருந்திருக்கிறது. அவர் இந்தியாவின் பிரதமராக இல்லையா? அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. முகாந்திரம் என்பது வேறு ஆதாரம் என்பது வேறு. இதை முதலில் ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!