1 வருடம் கழித்து வெளியான வீடியோ ஆதாரம்: வசமாக சிக்கிய போலீஸ் அதிகாரி:காலமே ஆசான்: அதிரடி நடவடிக்கை….!!

Author: Sudha
9 August 2024, 10:13 am

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி 2023 முன் விரோதம் காரணமாக வன்முறையில் ஈடுபட்ட இரண்டு பேரை புகாரின் பேரில் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்ற எஸ்எஸ்ஐ சிவகுமார் காவல் நிலையத்தில் வைத்து அவர்களை கொடூரமாகத் தாக்கியதாக கூறப்பட்டது. இது தொடர்பான வீடியோ ஆதாரம் நேற்று வெளியாகி வைரலானது.

ஒரு வருடத்திற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவர்களை அடிக்கும் வீடியோ சமீபத்தில் வைரலானதை அடுத்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்எஸ்ஐ) வியாழக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து தாம்பரம் நகர போலீஸார் கூறுகையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெரும்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த எஸ்எஸ்ஐ சிவக்குமார் மற்றும் அவரது குழுவினர் வன்முறை வழக்கில் இருவரைக் கைது செய்தனர். தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காணொளியின்படி, எஸ்எஸ்ஐ குற்றவாளியை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் பிளாஸ்டிக் பைப்பால் அடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.

மேலும் இது குறித்து நீதிமன்ற காவலில் உள்ள அம்மூவரையும் எஸ்எஸ்ஐ சிவகுமார் கடந்த வருடம் தாக்கினாரா?என்பது குறித்து விசாரிக்கப்படும் என தாம்பரம் காவல்துறையினர் அறிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சிவகுமார் அவரின் இந்த கொடூரமான நடத்தைக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!