15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து தலையை துண்டித்து கொலை : கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி

Author: Babu Lakshmanan
26 April 2022, 3:27 pm

சேலம் : சேலம் அருகே 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கழுத்து அறுத்து கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.

ஆத்தூர் அருகே கடந்த 2018ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 8ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (25) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த ஆத்தூர் போலீசார் தினேஷ்குமாரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது போக்சோ சட்டம் மட்டுமின்றி, குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விசாராணையின் போது , என்னை கொன்று விடுங்கள்..! தூக்கில் போடுங்கள்..! என்று கண்ணீர்மல்க புலம்பினார்.

இந்த நிலையில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியை கழுத்தை அறுத்து கொலை செய்த தினேஷ் குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பிற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

  • nazriya nazim fahadh open talk about why her absent in social media காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!
  • Close menu