8 வழிச்சாலை திட்டம்… இரட்டைவேடம் போடும் திமுக… வைரலாகும் வீடியோ ; அமைச்சரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!
Author: Babu Lakshmanan5 September 2022, 9:42 pm
8 வழிச்சாலை சாலை திட்டம் தொடர்பாக திமுக இரட்டை வேடம் போடுவதை அம்பலப்படுத்தும் விதமாக, வீடியோவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இதற்கு அப்போதைய எதிர்கட்சியான திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், 3000 கோடி கமிஷனுக்காகத்தான் அதிமுக இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இதனிடையே, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சென்னை – சேலம் வழிச்சாலை திட்டத்தை கொண்டு வரும் பணி மீண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து வரும் அதிமுக, இந்த விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில், 8 வழிச்சாலை சாலை திட்டம் தொடர்பாக திமுக இரட்டை வேடம் போடுவதை அம்பலப்படுத்தும் விதமாக, வீடியோவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.