சனாதன சர்ச்சை… அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் ஆ. ராசா வழக்கில் நாளை தீர்ப்பு.. கிலியில் திமுக!!!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2024, 10:01 pm

சனாதன சர்ச்சை… அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் ஆ. ராசா வழக்கில் நாளை தீர்ப்பு..கிலியில் திமுக!!!

அண்மையில் சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, பேசிய அவர், சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறீர்கள் என்றும், சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும், எதிர்க்க முடியாது என்றும் கூறினார்.

அவரது இந்தப் பேச்சுக்கு இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் உள்பட வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடி முதல் மத்திய அமைச்சர்கள் பலரும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல், பல்வேறு மாநிலங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டன.

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்பி ஆ ராசா மீது வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் மூன்று பேர் மீதான வழக்குகளில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 273

    0

    0