சனாதனப் பண்டிகை கார்த்திகை தீபத் திருநாள்… திமுகவினரை உரசிய ஹெச் ராஜாவின் வாழ்த்து!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2023, 4:03 pm

சனாதனப் பண்டிகை கார்த்திகை தீபத்திருநாள்… திமுகவினரை உரசிய் ஹெச் ராஜாவின் வாழ்த்து!!!

கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் உற்சவர்கள் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது.

கார்த்திகை தீப திருநாளுக்கான புராணமாக, சிவன் காத்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

அன்று அதிகாலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர்.

இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என கூறப்படுகிறது. இன்று அதிகாலை திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது; மாலையில் மகா தீபம் ஏற்றப்படும்.

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு பாஜக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கார்த்திகை தீபத் திருநாளான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு பாஜக சார்பாக அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கார்த்திகை தீபங்கள் அனைவரின் வாழ்க்கையையும் ஒளிரச் செய்யட்டும். அனைவர் இல்லங்களையும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் நிரப்பட்டும். இறைவன் அருள் இந்த கார்த்திகை தீபத்திருநாளில் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜா, அனைவருக்கும் சனாதன பண்டிகையாம் கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த கார்த்திகை தீபத்திருநாளில் அனைவரது இல்லங்களிலும் இருள் நீங்கி ஒளி பெற்றிட இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார். சனாதன தர்மத்தை ஒழிப்போம் என திமுகவினர் பேசி வரும் நிலையில் கார்த்திகை தீப திருநாளை சனாதன பண்டிகை என குறிப்பிட்டு ஹெச்.ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 295

    0

    0