மணல் கொள்ளை மரணங்கள் : திமுக அரசு மீது சீறிய மார்க்சிஸ்ட்!!

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் குச்சிபாளையத்தில், அங்கு ஓடும் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பெண்கள் அடுத்தடுத்து, நீரில் மூழ்கி பலியான துயரச்சம்பவம் தமிழகத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.

கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் பலி

இந்த துயரச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து, அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், “ஆறு, குளங்களுக்கு குளிக்கச் செல்லும்போது சிறுவர், சிறுமியர், இளைஞர்களை பெற்றோர்களும் பெரியோர்களும் கண்காணிக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

அத்துடன் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இரங்கல் தெரிவித்த இபிஎஸ்

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “7 பெண்கள் ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதுடன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்துள்ள 5 லட்சம் நிதியை 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

நிவாரணத் தொகையை இரு மடங்கு அதிகரிக்க சொன்னதன் மூலம், இந்த வேதனை சம்பவம் நடந்ததற்கான பின்னணி காரணத்தை அவர் நன்கு உணர்ந்துள்ளார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

சந்தேகம் கிளப்பிய அண்ணாமலை

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, தனது இரங்கல் செய்தியுடன், ஒரு பகீர் தகவலையும் வெளியிட்டார். அவர் தனது பதிவில் “கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மணல் எடுத்ததால் ஏற்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீர் என்று தெரியாது குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் உட்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ள செய்தி சோகத்தை அளிக்கிறது. அவர்களை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள். அவர்களுடைய ஆன்மா சாந்தி அடையட்டும். இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் மட்டும் கொடுத்துவிட்டுக் கடந்த செல்லாமல், மணல் எடுத்தவர் யார், உரிமம் பெற்றிருந்தாரா? என்பதனை விசாரித்து தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்!” என்று வலியுறுத்தினார்.

அதாவது மாநிலம் முழுவதும், ஏரி, குளம், குட்டை, ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மணல் கொள்ளை நடப்பதும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு, முக்கிய காரணமாக மாறிவருகிறது என்பதை திமுக அரசுக்கு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் இரங்கல்

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், “தடுப்பணை கட்ட தோண்டப்பட்ட பள்ளங்கள் நிரப்பப்படாதது  தான் உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்”
என்று திமுக அரசை வற்புறுத்தி இருக்கிறார்.

அதாவது, அதிக மணல் அள்ளப்பட்டதுதான் இந்த சோக நிகழ்வுக்கு காரணம் என்பதை அவரும் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

திமுக அரசை விளாசிய கே.பாலகிருஷ்ணன்

இப்படி ஒரே நேரத்தில் 7 பெண்கள் நீரில் மூழ்கி பலியானது தமிழகத்தில் அரிதிலும் அரிதான ஒரு நிகழ்வு என்பதால் இது தொடர்பாக திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,பாஜக தலைவர் அண்ணாமலை போலவே, தனது மனக்குமுறலை கொட்டி தீர்த்துள்ளார்.

இரங்கல் செய்தியுடன் மணல் கொள்ளை குறித்தும் அவர் மிகுந்த கவலை தெரிவித்திருக்கிறார். மதுரையில் பாலகிருஷ்ணன் கூறும்போது,”கடலூரில் மணல்கொள்ளை அபரிமிதமாக நடந்துள்ளது. அதனால், ஏற்பட்ட குழியில்தான் சிறுமிகள் சிக்கி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதேபோல குவாரிகளில் தோண்டப்படும் குழிகளையும் மூடாமல் விடுவதால் பெரும் ஆபத்து உள்ளது. அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் நீச்சல் பயிற்சியை கட்டாயமாக்கவும் தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்” என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.

ஆனால் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் எல்லாம் மார்க்சிஸ்ட் போல பிரச்சனையின் ஆணிவேரை ஆய்வு செய்து இரங்கல் தெரிவிக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.

மணல்கொள்ளையால் நடந்ததா விபத்து?

இத்தனைக்கும் 7 பெண்கள் பலியாக காரணமாக இருந்த கெடிலம் ஆற்றில் நடக்கும்
மணல் கொள்ளை குறித்து சில முன்னணி நாளிதழ்கள் தனிச் செய்தியும்
வெளியிட்டு இருந்தன.

“கடந்த ஓராண்டில் மட்டும், தமிழகத்தில் நீர்நிலைகளுக்கு குளிக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். அதுவும் மணல் அதிகமாக எடுக்கப்படும் பகுதிகளில் உண்டாகும் ஆழம் காரணமாக பல இடங்களில் சிறுவர் சிறுமிகளும் பெண்களும் உயிரை விடுவது அன்றாட நிகழ்வுகளாகவே மாறிவிட்டது” என்று சமூக ஆர்வலர்கள் வேதனையோடு கூறுகின்றனர்.

“குறிப்பாக ஆற்றங்கரையின் ஓரம் என்று மட்டும் இல்லாமல், மையப் பகுதிகளிலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிக ஆழமாக மணலை வெட்டி எடுக்கின்றனர். இதுபோன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் மணல் கொள்ளையை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. அரசியல்வாதிகளுக்கு சாதகமாகவும் நடந்துகொள்கின்றனர்.

போராட்டம் நடத்தியும் பலன் இல்லை

பல பகுதிகளில் மணல் திருட்டை தடுக்க கோரி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சாலை மறியல், முற்றுகை, ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டாலும் அதற்கு பலன் இல்லாமலும் போய்விடுகிறது. மாறாக மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களால், அவர்களுக்கு கொலை மிரட்டல்தான் வருகிறது.

இந்த சட்டவிரோத செயல்கள் ஆறுகள் தவிர ஏரி, குளங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் நள்ளிரவில் அன்றாடம் நடக்கிறது. இது நீர் அதிகம் இல்லாதபோது அபாயத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால் மழைக் காலங்களிலும், ஏற்கனவே அதிகளவில் நீர் தேங்கி நிற்கும் இடங்களில் குளிக்கச் செல்லும்போது உயிருக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்திவிடுகிறது.

மேலும் இதுபோன்ற இடங்களில் தண்ணீர் குறைவாக இருந்தாலும் கூட சேறும் சகதியும், பொதிந்திருக்கும் மண்ணும் குளிப்பவர்களை உள்ளே இழுத்து உயிருக்கு உலை வைத்து விடுகிறது. நீர்நிலைகளுக்கு குளிக்கச் செல்லும் சிறுவர், சிறுமிகளின் பாதுகாப்பை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் யோசனை ஏற்புடையதுதான். அதைவிட மிக முக்கியமாக அதிக மணல் அள்ளும் நீர்நிலை பகுதிகளில் அபாய அறிவிப்பு பலகைகளை அமைத்திட திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற வேதனை சம்பவங்கள் நடப்பதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால் இதுமாதிரியான நிகழ்வுகள் தொடர்கதையாகி விடக் கூடும்.

எதிர்க்கட்சிகளும் வெறும் இரங்கல், ஆறுதல் மட்டுமே தெரிவிக்காமல் ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் அரசுக்கு அவ்வப்போது வழங்க வேண்டும். தவிர
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரடியாக சந்தித்து தங்களால் முடிந்த அளவிற்கு நிவாரணமும் வழங்கவேண்டும்” என்று அந்த சமூக ஆர்வலர்கள் ஆதங்கத்தோடு கூறுகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அப்போ எல்லாமே செட்டப்பா? உஷாராக பிளான் போட்ட கமல்ஹாசன்? இதான் விஷயமா?

பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…

4 minutes ago

திடீரென வெளியான வீடியோ…அதிர்ச்சியில் உறைந்து போன பிரியா வாரியர்!!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…

14 minutes ago

பஸ் கண்டக்டருடன் உல்லாசம்.. ரகசிய வீடியோ : தப்பான சகவாசத்தால் விபரீதம்!

பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…

40 minutes ago

ரெட்ரோ படத்தில் வடிவேலு? சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குனர்? ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!

புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

52 minutes ago

UPSC தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை… நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற சிவச்சந்திரன் முதலிடம்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி…

1 hour ago

லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு! என்ன சார் கடைசில இப்படி பண்ணிட்டீங்களே?

ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…

2 hours ago

This website uses cookies.