கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்த சனி பகவான்… கன்னி, துலாமுக்கு அடித்தது ஜாக்பாட்… அந்த ரெண்டு ராசிக்கு ரொம்பவும் ஆபத்து…!!

Author: Babu Lakshmanan
20 December 2023, 7:25 pm
Quick Share

ஒவ்வொரு 12 மாதங்களுக்கு பிறகும் ஒரு புத்தாண்டு பிறப்பதை போல, கிரகங்களின் அடிப்படையிலும் மாற்றம் நிகழும். அவற்றில் முக்கியமானது சனி பகவான் இடப்பெயர்ச்சி தான். இந்த சனி பகவான் இடம்பெயரும் போது, சில ராசிக்காரர்களுக்கு நன்மையும் உண்டாகும், தீமையும் உண்டாகும்.

அந்த வகையில், இன்று மாலை 5.20 மணியளவில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் இடம்பெயர்ந்துள்ளார். கும்ப ராசியில் இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்ய இருக்கிறார். இதன் மூலம், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகம், பாதம் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர்.

கும்ப ராசிக்கு சனி பகவான் இடம்பெயர்ந்தாலும், சனி தனது பிற்போக்கு இயக்கத்தை 2024ம் ஆண்டு ஜுன் 30ம் தேதியன்று தொடங்கும். இது அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. அதன்பிறகு, நவம்பர் 15ல் நேரடி இயக்கத்தை தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6ம் தேதி பூரட்டாதி, அக்டோபர் 3ம் தேதி சதயம் நட்சத்திரத்திற்கு செல்லும் சனி, மீண்டும் டிசம்பர் 27ம் தேதி பூரட்டாதிக்கு திரும்புகிறார்.

இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் கன்னி மற்றும் துலாம் ராசிக்கு நல்ல பலன்களை தர இருக்கிறது. இந்த சமயத்தில் உடல்நலப் பிரச்சனைகள் தீரும். முக்கியமாக புதிய தொடக்கங்களுக்கு இது மிகவும் பொருத்தமான நேரம் என்றும் சொல்லப்படுகிறது. வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இந்த இரு ராசிக்காரர்கள் எதை செய்தாலும் அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த சமயத்தில் நீங்கள் கோடீஸ்வரர் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

துலாம் ராசிக்காரர்களும் இந்த சமயத்தில் தங்கள் வேலைகளில் எதிர்பார்க்காத அளவுக்கு முன்னேற்றத்தை அடைவார்கள். ஆனால், கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் சில பிரச்சனைகள் வரலாம் என்று கூறப்படுகிறது. தனுசு ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களே கிடைக்கும். எனவே கவனமாக இருப்பது முக்கியது. கடகம், விருச்சிகத்தை பாதிக்கும் என்பதால், அடிக்கடி பிரச்சனைகளை ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் அவசியமானதாகும்.

சனி பகவானின் பரிகாரங்களை செய்வதன் மூலம் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ளலாம் என்கின்றனர் ஜோதிடர்கள்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 280

    0

    0