கர்நாடக பாஜகவை அலற விட்ட முன்னாள் ஐஏஎஸ்.. காங்கிரஸ் வேட்பாளராக திருவள்ளூரில் போட்டியிடும் சசிகாந்த் : யார் இவர்?!
Author: Udayachandran RadhaKrishnan24 March 2024, 5:52 pm
கர்நாடக பாஜகவை அலற விட்ட முன்னாள் ஐஏஎஸ்.. காங்கிரஸ் வேட்பாளராக திருவள்ளூரில் போட்டியிடும் சசிகாந்த் : யார் இவர்?!
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிடும் அவரைப் பற்றிய சிறுப்தொகுப்பை தற்போது காணலாம்.
கர்நாடகாவில் தக்ஷின கன்னடா உள்ளிட்ட சில மாவட்டங்களில் துணை ஆட்சியர், மாவட்ட ஆட்சியர், துறைச் செயலாளர் என பல பொறுப்புகளை வகித்தவர் சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்.
இவர் 2009-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 2019-ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். வெறும் 10 ஆண்டுகள் மட்டுமே ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியிருந்தாலும் கூட பணிக்காலத்தில் இவர் ஆற்றிய சாதனைகள் ஏராளம்.
குடிமக்கள் பதிவேடு, குடியுரிமைச் சட்டம் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தவர் சசிகாந்த் செந்தில்.
கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்த சசிகாந்த் செந்தில் அக்கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது செயல்பாடுகள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட ராகுல், கர்நாடக சட்டசபைத் தேர்தல் வார் ரூம் இன் சார்ஜ் ஆக நியமித்து பெருமைப்படுத்தியுள்ளார்.
சசிகாந்த் செந்தில் கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரி. தன் பணிக்காலத்தில் அவர் கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார். அதனால் அவருக்கு கர்நாடக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், தேவைகள் என்னவென்பது குறித்த ஆழமான, தெளிவான புரிதல் இருந்துள்ளது.
சசிகாந்த் செந்தில், 2019 செப்டம்பரில் தனது பணியை ராஜினாமா செய்தார். ‘தேசத்தை கட்டமைக்கும் அடிப்படை அமைப்புகள் சிதைக்கப்படுகின்றன. அவற்றை காப்பாற்ற வேண்டும்’ என்று கூறியே அவர் தனது பணியை ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூகவலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். கர்நாடகத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தமிழக பாஜக தலைவரும் அண்ணாமலை பாஜக சார்பில் தேர்தல் பணிக்காக அனுப்பப்பட்ட அதே வேளையில், காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டது சசிகாந்த் செந்திலே. கட்சியின் கட்டளையை ஏற்று கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கான பணியை கையில் எடுத்து திறம்பட முடித்தார்.
0
0