மீண்டும் சாத்தான்குளம் சம்பவம்? விசாரணையில் நம்பிக்கை இல்லை : பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் திருப்பம்!!!
Author: Udayachandran RadhaKrishnan30 மார்ச் 2023, 9:01 காலை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட எட்டு பேர் மூன்றாம் நாள் நீதி விசாரணையில் ஆஜர். சம்மன் அனுப்பப்பட்ட நபர்களிடம் மட்டுமே வாக்குமூலம் நடத்தப்படும் என விசாரணை அதிகாரி தெரிவித்ததால் நடைபெறும் விசாரணை மீது நம்பிக்கை இல்லை என பாதிக்கப்பட்ட நபர்கள் வெளியேறினர்.
அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை குழு நியமிக்கப்பட்டு மூன்றாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
முதல் நாள் நடைபெற்ற விசாரணையில் லட்சுமி சங்கர் என்பவர் ஆஜராகி தனது தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்தார் தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்று காலையில் பாதிக்கப்பட்ட நபரான சூர்யா என்பவர் சார் ஆட்சியர் முகமது சபீர் ஆழம் முன்பு ஆஜராகி தனது தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்தார் தொடர்ந்து அவர் வெளியே வரும்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில் தனக்கும் காவல்துறைக்கும் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் தான் கீழே விழுந்து தான் பல் உடைந்ததாகவும் தெரிவித்து சென்றார்.
ஏற்கனவே ஆடியோ வெளியிட்ட சூர்யா என்ற நபர் சார் ஆட்சியர் விசாரணையின் போது மாற்றி சொல்லிய விவகாரத்தின் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சார ஆட்சியர் தாசில்தார் முன்னிலையில் மருத்துவர்கள் சூர்யாவை பரிசோதித்து முழு அறிக்கை தர உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அவருக்கு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் பல் விழுந்ததற்கான காரணம் குறித்து முழு பரிசோதனையும் செய்யப்பட்டது.
தொடர்ந்து மாலையில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் பணி செய்யும் உதவி ஆய்வாளர் உட்பட நான்கு காவலர்கள் சார் ஆட்சியர் முன்பு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கத்தை அளித்தனர்.
தொடர்ந்து பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்களான செல்லப்பா, மாரியப்பன், சுபாஷ், வேத நாராயணன் அந்தோணி, மாரியப்பன், இசக்கிமுத்து ஆகிய ஏழு பேரும் சார் ஆட்சியர் முன்பு ஆஜராகி தனது தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்ய வந்தனர்.
ஆனால் விசாரணை அதிகாரியான சார் ஆட்சியர் சம்மன் அனுப்பப்பட்ட சுபாஷிடம் மட்டுமே விசாரணை நடத்தப்படும் மற்றவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அதன் பின்னர் ஆட்சியர் உத்தரவுப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை மீது நம்பிக்கையில்லை எனக் கூறி வெளியேறினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர் மகாராஜன்-: சார் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விசாரணை மீது நம்பிக்கை இல்லை காவல்துறைக்கு சாதகமாகவே விசாரணை நடந்து வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையை கைவிட்டு விட்டு சம்மன் அனுப்பியவர்களுக்கு மட்டுமே விசாரணை வாக்குமூலம் என தெரிவித்து வருவது வேடிக்கையாக உள்ளது.
மாவட்ட ஆட்சியரை சந்தித்து அவர்களிடம் மனு அளித்த பின்னர் வாக்குமூலத்திற்கு அழைப்பதாக சொல்வது காவல்துறை அதிகாரிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் நிலை உருவாக்கும் முயற்சி என தெரிவித்தார்.
சட்டப்படி அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்லப்பா மற்றும் இசக்கிமுத்து மாரியப்பன் மற்றும் வேத நாராயணன் ஆகியோர் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஆகியோர் இடைந்து தங்களை கொடூரமாக தாக்கியதாகவும் ஹிந்தியில் பேசி தங்களை சரமாரியாக அடித்ததாகவும் குற்றம் சாட்டினர் கட்டிங் பிளேயர் கொண்டு பல்லை பிடுங்கி கொடூரமாக தாக்கியுள்ளார் எனவும் தெரிவித்தனர்.
தனது சகோதரர் திருமணமானவர் என சொல்லிய நிலையில் சூ கால்களை கொண்டு நெஞ்சில் குதித்து அவரை படுகாயம் ஏற்படுத்தியுள்ளார் உணவு கூட அருந்த முடியாமல் தாங்கள் தவித்து வருவதாகவும் நீராகாரத்தை மட்டுமே உண்டு தங்களது வாழ்க்கையை கழித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
0
0