திடீர் நெஞ்சுவலி… சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2024, 7:24 pm

திடீர் மாரடைப்பு காரணமாக சவுக்கு சங்கர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண் போலீஸ் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர் அடுத்தடுத்து கஞ்சா வழக்கிலும் சிக்கியதால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதையடுத்து குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்றத் ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால் தொடர்ந்து தேனி எஸ்பி பரிந்துரைத்ததின் பேரில் மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதையடுத்து சவுக்கு சங்கரின் தாயார் தொடாந்த ஆட்கொணர்வு மனுவால் மீண்டும் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் விடுவிக்கப்பட்ட அவர், செய்தியாளர்களை சந்தித்து, தான் உண்மையை பேச பயப்படமாட்டேன், சிறையில் தனக்கு நடந்த வேதனைகளை கூறிய அவர், திமுக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதையடுத்து தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கும் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்த பின்பே முழு தகவல் தெரியவரும்.

  • Surya Retro Movie OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
  • Views: - 187

    0

    0