நள்ளிரவில் பரபரப்பு.. சவுக்கு சங்கர் திடீர் கைது… கோவை போலீசார் அதிரடி!!
Author: Babu Lakshmanan4 May 2024, 8:29 am
பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், சவுக்கு மீடியா எனும் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து தமிழக அரசுக்கு எதிராகவும், அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
மேலும் படிக்க: நெருக்கடியில் சிக்கிய EPS, அண்ணாமலை… தேர்தல் களத்தில் திடீர் ட்விஸ்ட்..!
இதனிடையே, அவரது நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி வந்தார். அவருக்கு ஆதரவாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்து வந்தன.
இந்த நிலையில், பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சங்கரை, நள்ளிரவு 3 மணியளவில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.