அழைத்து வரும் போது தாக்கிய பெண் காவலர்கள்…? நீதிபதியிடம் கதறிய சவுக்கு சங்கர்… வீடியோ எடுத்ததாகவும் புகார்!!

Author: Babu Lakshmanan
15 May 2024, 4:26 pm

கோவை சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும்போது, பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் புகார் தெரிவித்துள்ளார்.

காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் ஏற்கனவே சவுக்குசங்கரை காவல்துறையினர் தேனியில் வைத்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து சவுக்கு சங்கரி நேர்காணலை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் இணையதளத்தில் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் கடந்த 10ம் தேதி இரவு டெல்லி கைது செய்யப்பட்டு திருச்சி நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி மாவட்ட, முசிறி டிஎஸ்பி யாஸ்மீன் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது மாவட்ட சைபர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருந்தனர்.இந்த வழக்கில் ஆஜர்படுத்தப்படுவதற்காக இன்று காலை கோயம்புத்தூரில் இருந்து சவுக்கு சங்கரை காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர் நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் படிக்க: ‘2-3 வருஷமா உள்ளே நிறைய பேரு இருக்காங்க.. அது தெரியுமா..?’ ஜாமீன் வழக்கில் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!!!

இதன் காரணமாக நீதிமன்றம் முழுவதும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் குறிப்பாக நூற்றுக்கு மேற்பட்ட பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கர் நீதிபதியின் முன் கோயம்புத்தூரில் இருந்து அழைத்து வந்த போது பெண் காவலர்கள் 5 பேர் தன்னை தாக்கியதாகவும், அதனை இன்னொரு பெண் காவலர் செல்போன் மூலம் வீடியோ எடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும், தனக்கு இதன் காரணமாக வலி ஏற்பட்டுள்ளதாகவும் கூறியதை தொடர்ந்து அங்கிருந்து காவல்துறையினர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் அவரை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!