‘உயிருக்கு பாதுகாப்பு இல்ல’… கட்டுடன் வந்து நீதிபதியிடம் கோரிக்கை வைத்த சவுக்கு சங்கர் ; நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு !!

Author: Babu Lakshmanan
8 May 2024, 4:56 pm

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்துள்ளது

காவல்துறை அதிகாரிகள், பெண் போலீஸார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கடந்த 4ம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த கைது நடவடிக்கையின் போது போது கஞ்சா வைத்திருந்ததாக சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிந்தனர். அந்த வழக்கில் சவுக்கு சங்கர் நேற்று (மே 7) மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக கோவையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் படிக்க: ‘Dear சாம் பிட்ரோடா’… தென்னிந்தியர்கள் குறித்து கருத்து தெரிவித்த காங்., நிர்வாகி ; போட்டோவை போட்டு பதிலடி கொடுத்த அண்ணாமலை

நீதிபதி செங்கமலச்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, கோவை சிறையில் 10 காவலர்கள் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும், கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை எனவும் எனக்கூறி மதுரை சிறைக்கு தஞ்சை மாற்றுமாறு சவுக்கு சங்கர் கோரிக்கை விடுத்தார். மே 22 வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவை சிறைக்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.

சவுக்கு சங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வாயிலில் போராட்டம் நடத்திய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அவர் அழைத்து செல்லப்பட்ட வாகனம் மீது துடைப்பங்களை வீசி எறிந்து கோஷமிட்டனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ