பாஜக ஐடி விங் தலைவராக சவுக்கு சங்கர் நியமனமா..? அண்ணாமலை பெயரில் வெளியான பாஜகவின் அறிக்கை..? பரபரப்பில் தமிழக அரசியல்!!

Author: Babu Lakshmanan
7 March 2023, 2:34 pm

சென்னை : தமிழக பாஜகவின் ஐடி விங் தலைவராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டதாக வெளியான தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. அதேவேளையில், உட்கட்சி பூசலும் நாளுக்கு நாள் வெடித்து வருகிறது. தமிழக பாஜக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் காயத்ரி ரகுராம் விலகியதை அடுத்து, தற்போது ஐடி விங்க் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், கட்சியின் ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

அண்ணாமலை குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்திய பிறகு, அவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில், பாஜக ஐடி விங்க் தலைவராக யூடியூபர் சவுக்கு சங்கர், மாநில செயலாளராக பிரதீப் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகியது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- தமிழக பாஜக தொண்டர்கள் அனைவருக்கும் மாநிலத் தலைமையின் அன்பு வேண்டுகோள். கடந்த சில தினங்களாக தமிழக பாஜகவில் நிகழும் மாற்றங்கள் மன வேதனையை ஏற்படுத்துகின்றன. நான் எங்கோ ஓர் கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தேன். பாஜகதான் என்னை இந்த நாற்காலியில் அமர வைத்தது. எனக்கு கட்சியின் கொள்கைகளோ கோட்பாடுகளோ தெரியாது. அதைத் தெரிந்து கொள்ள நேரமோ அவசியமோ எனக்கு இல்லை என்றே கருதுகிறேன். எனது தலைமையை வெறுத்து, கட்சியில் இருந்து வெளியேற விரும்பும் நபர்கள் தாராளமாக வெளியேறி கொள்ளுங்கள், ஏற்கெனவே வெளியேறிவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க.

பதவியில் இருந்து வெளியேறிய நபர்களின் இடத்திற்கு புதிய பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டிய நிர்பந்தத்தில் கட்சி உள்ளது. அதனடிப்படிஅயில், தமிழக பாஜக ஐடி விங் தலைவராக அனைவரும் அறிந்த முகமான பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மற்றும் பாஜக ஐடி விங் மாநில செயலாளராக பிரதீப் (வாயிஸ் ஆஃப் சவுக்கு சங்கர்) ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் என்பதை இந்த அறிக்கை வாயிலாக தெரிவித்துக் கொள்கிறது, என கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில் பாஜக ஐடி விங் தலைவராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரபல செய்தி நிறுவனமும் செய்தியாக வெளியிட்டுள்ளது. இதற்கு சவுக்கு சங்கர் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இது தொடர்பாக செய்தி வெளியிட்ட செய்தியாளருக்கு புலிட்சர் விருது வழங்க வேண்டும் என்று கூறி கிண்டலடித்துள்ளார்.

இதனிடையே, இந்த அறிக்கை முற்றிலும் போலியானது என்றும் திட்டமிட்டே சில விஷமிகள் இதுபோன்று பரப்பி வருவதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில் திமுகவினர் இதுபோன்ற தகவலை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu