ஆர்எஸ்எஸ்சை பார்த்து பயமா? மன்னிப்பு கேட்க தயாரா இருங்க : CM ஸ்டாலினுக்கு குஷ்பு பரபரப்பு ட்வீட்!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2023, 10:02 am

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை காவல்துறை அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் பேரணியை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திறந்தவெளியில் பேரணி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதனடிப்படையில் அனுமதி கோரி அளித்த விண்ணப்பித்தை ஏற்று, மார்ச் 5ஆம் தேதி பேரணி நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று டிஜிபி.,க்கு ஆர்.எஸ்.எஸ் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்தால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் தமிழக அரசு மேல்முறையீடு குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகையும், பாஜக பிரமுகரமான குஷ்பு, ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

உச்சநீதிமன்றமும் அனுமதியே வழங்கும், அதற்கான பாடத்தை திமுக கற்க வேண்டிய நிலைமை ஏற்படும் , மீண்டும் மன்னிப்பு கேட்ட தயாரா இருங்க என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏன் ஆர்எஸ்எஸ்சை பார்த்து திமுகவுக்கு பயமா? பட்டால்தான் புரியும், CM முக ஸ்டாலின் அவர்களே, எது உங்களை பயமுறுத்துகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 505

    0

    0