செங்கோல் நாடகம்.. இது அரசியல் சூதாட்டம் : கருப்பு சட்டை அணிந்து திருமாவளவன் கடும் எதிர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2023, 3:29 pm

சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நடைபெறுவதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கருப்பு நாளாக கடைபிடிக்கிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய விசிக கட்சி தலைவர் திருமாவளவன், செங்கோலை ஏந்துகிறோம் என்ற பெயரில் நடத்துகிற நாடகம், அரசியல் சூதாட்டம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்துள்ளோம்.

ஆதீனங்களை அழைத்து சிறப்பிப்பது தமிழ்நாட்டு மக்களை குறி வைத்து காய்களை நகர்த்தி சங்பரிக்குவார் அமைப்புகள் செய்கின்ற சூது, ஏமாற்று வேலை. தமிழ்நாட்டில் பாஜக என்ன சித்து வேலை செய்தாலும், எத்தனை அச்சுறுத்தல்களை செய்தாலும் இங்கு அவர்களுக்கு இடம் இல்லை என்பதை 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மீண்டும் நிரூபணம் செய்வார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 478

    0

    0