நாளை பள்ளிகளுக்கு விடுமுறை? இன்று மாலை வெளியாகும் அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2024, 12:00 pm

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. முன்னேற்பாடாக நேற்று சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதே போல ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து அவசர கால செயல்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மின்தடை ஏற்படவில்லை. இது வரை 300 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் பேர் வரை தங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நிவாரண மையங்களில் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் உள்ள 20 சுரங்கப்பாதைகளில் வாகன போக்குவரத்து சீராக உள்ளது. 2 சுரங்கப்பாதைகளில் மட்டும் போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து இன்று மாலைக்குள் முதலமைச்சர் முடிவெடுப்பார் என துணை முதல்வர் உதயநிதி கூறினார்.

  • Vishal Ready for Marriage Ceremony பத்திரிகையோடு நடிகர் விஷால்… விரைவில் திருமணம் : நல்ல நேரம் ஸ்டார்ட்..!!