10,12ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Author: Babu Lakshmanan24 June 2022, 9:27 am
பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வரும் நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 16 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவுகள் கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதாகவும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.07% மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இதனையடுத்து, பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது இந்த நிலையில் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது. 10,12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11,மணி முதல் பிறந்த தேதி, பதிவு எண் விவரத்தை அளித்து www.dge.tn.nic.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0
0