ஜன.,18 பள்ளிகளுக்கு விடுமுறையா..? அமைச்சர் அன்பில் மகேஷ் திடீரென வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Babu Lakshmanan
16 January 2023, 2:18 pm

ஜனவரி 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பள்ளி, கல்லூரிகளுக்கு 15,16,17 ஆகிய 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் என்று 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, வரும் 18ம் தேதியும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அரசின் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் 18-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், வரும் 18-ம் தேதி (புதன் கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பொங்கலுக்கு பின் புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை எனவும் கூறினார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!