திருவொற்றியூரில் வாயுக்கசிவு.. பள்ளி மாணவிகள் மயக்கம்.. பெற்றோர் முற்றுகை!

Author: Hariharasudhan
25 October 2024, 6:01 pm

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகள் வாயுக்கசிவு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை: சென்னையில் உள்ள திருவொற்றியூரில் இயங்கும் தனியார் பள்ளி ஒன்றில், இன்று (அக்.25) பிற்பகல் ஏற்பட்ட வாயுக் கசிவால், அப்பள்ளியில் படித்து வரும் சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென மயக்கம் அடைந்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட மாணவிகள், அங்கிருந்த வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

Tiruvottiyur

மேலும், பள்ளியில் இருந்த மாணவ, மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும், இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர், உடனே பள்ளியின் முன்பு கூடத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. திருப்பதி பக்தர்கள் அதிர்ச்சி!

ஆனால், அங்கு வந்த பெற்றோர், இன்று காலை 10 மணி முதல் வாயுக்கசிவு வெளியேறியுள்ள நிலையில், அப்போதே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பள்ளி வளாகத்தில் தீயணைப்புத் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ