பீர் குடித்தபடி பேருந்தில் பயணிக்கும் மாணவிகள்.. கத்தி கூச்சலிட்டு அட்டூழியம்.. வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி…
Author: Babu Lakshmanan23 March 2022, 10:45 pm
பள்ளி மாணவிகள் பேருந்தில் பீர் குடித்தபடி பயணிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருக்கழுக்குன்றம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பெரும்பாலும் திருக்கழுக்குன்றம் பகுதியின் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ளவர்களே இங்கு படித்து வருகின்றனர். இப்படியிருக்கையில், மாணவ, மாணவிகள் பெரும்பாலும் அரசுப் பேருந்துகளில் பயணித்தே, பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், பள்ளி மாணவிகள் பேருந்தில் பீர் குடித்தபடி பயணிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், பேருந்தில் கத்தி, கூச்சலிட்டு சக பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் அவர் ஆட்டம், பாட்டம் போட்டுள்ளனர்.
இது தொடர்பாக சிலர் கூறுகையில், தினமும் இந்தப் பேருந்தில் பயணிக்கும் மாணவ, மாணவிகளில் சிலர் மது அருந்திவிட்டுதான் வந்து செல்வதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாணவ, மாணவிகளை நடத்துநரோ, ஓட்டுநரோ கண்டிக்கவில்லையா..? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.