அரசுப்பள்ளியில் 3 மாத ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு… புதுக்கோட்டையில் வட்டாரக்கல்வி அலுவலகத்தை சூறையாடிய பெண் ஆசிரியர்..!!

Author: Babu Lakshmanan
24 January 2022, 3:31 pm

புதுக்கோட்டை அருகே 3 மாத ஊதியத்தை வழங்காததால் ஆத்திரமடைந்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை, வட்டாரக் கல்வி அலுவலகத்தை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த தைலம்மை, மணமேல்குடி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அதிகாரிகள் இவருக்கு ஊதியத்தை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியை தைலம்மை மணமேல்குடியிலுள்ள வட்டார கல்வி அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த கணிணி உள்ளிட்ட பொருட்களை கீழேத்தள்ளி உடைத்துள்ளார். மேலும், அங்கிருந்த ஆவணங்களை தூக்கியெறிந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், அங்கிருப்பவர்களை வேலை செய்யக் கூடாது என மிரட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வட்டாரக்கல்வி அலுவலர்கள் சார்பில் மணமேல்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சம்பந்தப்பட்ட ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்