வெடிமருந்து வெடித்த விபத்தில் பள்ளி மாணவி உடல்சிதறி பலி: தாயார் படுகாயம்…ராஜாக்கமங்கலத்தில் சோகம்..!!

Author: Rajesh
15 March 2022, 10:07 am

கன்னியாகுமரி: ராஜாக்கமங்கலம் அருகே வெடி மருந்து வெடித்ததில் மாணவி உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆறுதெங்கன்விளையை சேர்ந்தவர் ராஜன்( 40). தொழிலாளியான இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு தேன்மொழி( 13), வர்ஷா (10) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் ஆலங்கோட்டை யில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தேன்மொழி எட்டாம் வகுப்பும், வர்ஷா ஐந்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இவர்கள் வீட்டில் முயல் வளர்த்து வருகிறார்கள். அந்த முயலை வர்ஷா பராமரித்து வந்துள்ளார். அதேபோல் நேற்று இரவு 8 மணி அளவில் முயலுக்கு உணவு கொடுக்கச் சென்றுள்ளார். அப்போது மாணவி வீட்டின் முன் பகுதியில் உள்ள அறைக்கு சென்றார். அந்த அறையில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் வெடிமருந்து வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

மாணவி உள்ளே சென்று சிறிது நேரத்தில் பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த அறை இடிந்து தரைமட்டமானது . இதனால் அந்த பகுதியே அதிர்ந்தது . சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் மற்றும் வீட்டில் இருந்த ராஜன் பார்வதி தேன்மொழி ஆகியோர் தரைமட்டமான அறைக்குள் ஓடி சென்று பார்த்தனர். அங்கு வர்ஷா உடல் சிதறி பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் வெடிமருந்து வெடித்து சிதறியதால் ஒரு கல் வந்து விழுந்ததில் பார்வதி படுகாயமடைந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது ராஜன் வீட்டுக்குள் வெடிமருந்து எப்படி வந்தது. அங்கு அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க வெடிமருந்து பதுக்கி வைத்திருந்து எப்படி என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெடிமருந்து வெடித்து சிதறியதில் மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!