தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்.. 3 நாள் ஜாக்கிரதையா இருங்க : மஞ்சள் Alert கொடுத்த வானிலை மையம்!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2024, 10:28 am

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்.. 3 நாள் ஜாக்கிரதையா இருங்க : மஞ்சள் Alert கொடுத்த வானிலை மையம்!

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கடுமையான கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதில் குறிப்பாக தமிழகத்தில் இயல்பான அளவைவிட வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சில பகுதிகளில் வெப்பநிலை உட்சபட்சத்தை தொட்டு வெப்ப அலை வீசுகிறது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையும் விடுத்தது வருகிறது. கடுமையான வெயிலால் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரித்தே காணப்படும் என்றும் மே 2ம் தேதி முதல் 4ம் தேதி வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்.. இடையூறாக இருந்த கணவன் கொலை : COURT கொடுத்த அதிரடி தண்டனை!

இதனால் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒடிசா, பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த சில நாட்கள் கடுமையான வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதால் அந்த மாநிலங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி