CM ஸ்டாலினை விட திறமையானவர் கனிமொழி … இது திமுகவினருக்கே தெரியும்.. பதவியை விட்டுக்கொடுக்க முடியுமா..? வம்புக்கு இழுக்கும் சீமான்!!

Author: Babu Lakshmanan
30 December 2022, 5:17 pm

திமுக எம்பி கனிமொழிக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க தயாரா..? என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9ம் ஆண்டு நினைவு தினம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நம்மாழ்வாரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

Angry Seeman - Updatenews360

பின்னர், அவர் அளித்த பேட்டியில் வருமாறு:- கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பன கருத்து கேட்பு கூட்டம் தேவையற்றது. பேனா சின்னம் அமைக்கக்கூடாது என்று நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

மகளிர் தலைநிமிர மாநிலம் நிமிரும் என்று சொல்கிறீர்கள். அதை வரவேற்கிறேன். நீங்க மகளிருக்கு என்ன கொடுத்து இருக்கீங்க..? எத்தனை அமைச்சர், சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில், கட்சியில் எத்தனை இடம் கொடுத்து இருக்கீங்க. நீங்களும், உங்க மகனும் விலகுங்க. ஒரு இரண்டரை வருடம் உங்க குடும்பத்தைச் சேர்ந்த கனிமொழிக்கு முதலமைச்சர் பதவி கொடுங்க. CM ஸ்டாலினை விட கனிமொழி தகுதியானவர். இதனை கட்சிக்காரர்களும், பொதுமக்களும் மறுக்க மாட்டார்கள்.

பெண்ணுக்கு முன்னுரிமை கொடுத்தாரு-னு வரலாற்றுல இடம்பிடிங்க. தங்கச்சிக்கு தான் விட்டுக்கொடுக்கச் சொல்றேன். நீங்க ஒன்னும் புத்தர் இல்லயே. இளவரசர் பட்டம் வேண்டாம் என்று செல்வதற்கு…

முதியோர் உதவித்தொகையை நிறுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. மீனம்பாக்கத்தில் உள்ள விமானநிலையமே போதுமானதாக இருக்கும் நிலையில், புதிதாக 5 ஆயிரம் ஏக்கரில் விமான நிலையம் எதற்கு..?, அதற்கு 4 ஆயிரம் கோடி ஒப்பந்தம் போட்டால் கமிஷன் கிடைக்கும் என்பதற்காகவே அந்த திட்டத்தை கொண்டு வருகிறார்கள், எனக் கூறினார்.

  • GOAT in Small Screens இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்!!
  • Views: - 464

    0

    0