தன்னை எதிர்த்து போட்டியிட்டு, தான் வாங்கும் ஓட்டுகளை விட கூடுதலாக ஒரு ஓட்டு வாங்க முடியுமா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் இருந்து போட்டியிட்டால், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டு கொள்ளட்டும் என்றும், எப்படியும் அவர் போட்டியிட்டு தோற்க தானே போகிறார் என்று கூறியிருந்தார்.
அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது :- நான் எங்கே நின்றாலும் தோற்று விடுவேன், தம்பி அண்ணாமலை எங்கே நின்றாலும் வெற்றி பெற்று விடுவாரா.? இல்லை, பாஜக தான் வெற்றி பெறுமா.? நான்தான் சிங்கம் போல துணிவா தனித்து தேர்தலில் நிற்கிறேன்.
பத்தாண்டுகளாக நாட்டை ஆண்ட பெரிய கட்சி என்று கூறுகிறீர்கள். வாருங்கள், தமிழ்நாட்டில் தேர்தலில் நேரடியாக மோதி பார்ப்போம். நான் வாங்குற ஓட்டை விட ஒரு ஓட்டு கூட வாங்கி காட்டுங்கள் அல்லது ஒரு சதவீத ஓட்டுகளை கூடுதலாக வாங்கி காட்ட முடியுமா.? நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களில் நான் போட்டியிடுவேன், நீங்கள் எத்தனை இடத்தில் போட்டியிடுவீர்கள். அதிகபட்சம் போட்டியிட்டால் 7 இல்லை என்றால் 8.
அதுவும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு நடையா நடந்து கெஞ்சி வாங்க வேண்டும். அதுவும் அவர் கொடுப்பாரா என்பதை யோசிக்க வேண்டும். பாஜகவிற்கு தமிழகத்தில் ஒதுக்கு இடம் எல்லாம் வேஸ்ட் தான், என தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.