கப்பு முக்கியம் பிகிலு…. இந்திய கிரிக்கெட் அணிக்கு சீமான் கூறிய கலக்கல் வாழ்த்து!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2023, 12:55 pm

கப்பு முக்கியம் பிகிலு…. இந்திய கிரிக்கெட் அணிக்கு சீமான் கூறிய கலக்கல் பதில்!!

கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த உலக கோப்பை தொடர் இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மோத உள்ளன. இந்த போட்டியை காண பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வரவுள்ளனர்.

சுதந்திர போராட்ட தியாகி வ.வு.சியின் நினைவு தினமான நேற்று அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரும் உலகக்கோப்பை பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.

உடனே கப்பு முக்கியம் பிகிலு என விஜய் பட வசனத்தை சீமான் கூறவே அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அதன் பிறகு, எனக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தமில்லை. நானும் முன்னர் கிரிக்கெட் பார்த்தேன். எப்போது வீரர்களை கோடி கோடியாய் ஏலம் எடுக்க ஆரம்பித்தானோரோ அப்போது அது ஆன்லைன் ரம்மி போல ஒரு சூதாட்டமாகி விட்டது என சீமான் கூறினார்.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!