எனக்கும் விஜய்க்கும் ஒத்துவராது… அவரு கொள்கை வேறு.. எங்க கொள்கை வேறு : சீமான் தடாலடி!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2024, 11:52 am

ஆரம்பத்தில் விஜய் கட்சியுடன் கூட்டணியா என்பதை அவ்வப்போது பேசி வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது ஜகா வாங்கியுள்ளார்.

கனமழையால் பாதிக்கப்பட்ட காந்திபுரம் பாண்டியன் நகர் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து மழை பாதிப்பு குறித்த கேட்டறிந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,
இந்தப் பகுதி கடுமையாக மழையால் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் இந்த மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்

எத்தனை ஆண்டுகளுக்கு போர்க்கால நடவடிக்கை எடுப்பீர்கள் இது ஒரு அடிப்படை இங்கு மக்கள் அழுது கொண்டே சொல்கிறார்கள் எந்த கண்மாயுமே தூர்வாரப்படவில்லை ஆழப்படுத்தப்படவில்லை நீர் ஓட கால்வாய் எல்லாம் சிமெண்ட் பூசி சுறுக்கி விட்டீர்கள் அதனால் அதிகளவு நீர் சென்று செல்ல வாய்ப்பில்லை இது போன்ற நகருக்குள் வந்தால் மக்கள் பெரிய பாதிப்பிற்கு ஆளாகி விடுவார்கள்

இயற்கை மேல் குற்றச்சாட்டு வைப்பது குறித்த கேள்விக்கு, மழை இல்லாமல் நமக்கு எதுவும் இல்லை நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் மழை ஏன் பெய்கிறது என கேட்க வருகிறீர்கள். உங்களுடைய கையாலாக தனத்துக்கு யாரையாவது பழி சொல்கிறீர்களா?

விஜய்யுடன் கூட்டணி இல்லை

விஜய் மாநாட்டில் பாசிசம் திராவிட மாடலென சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற விஜயின் கருத்துக்கு? நான் 13 வருடத்திற்கு முன்பாக இதே கோட்பாடு கோபத்துடன் தான் வந்தேன் அதற்கு பின்னாடி தற்பொழுது தம்பி வந்துள்ளார்.

மேடைக்கு மேடை சத்தமாக பேசினால் மட்டும் புரட்சி செய்திட முடியாது என விஜய் உங்களை சாடியது போன்று கூறியது குறித்த கேள்விக்கு, அப்படி இல்லை என்றார்.

விஜயோடு கூட்டணி சேர்ந்து பயணிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, இருவருக்கும் கொள்கைகள் ஒத்துப் போகவில்லை. இந்திய திராவிடக் கொள்கைக்கு மாற்றாக வந்தவர்கள் நாங்கள்

தமிழ் தேசியவர்கள் நாங்கள் வந்தது கட்சி ஆரம்பித்தது அரசியல் அதிகாரத்துக்கு வரவேண்டும் என நான் வரவில்லை படம் எடுத்து பிழைக்க வந்தவன் வரலாறு இந்த பிழைப்பை எனக்கு கொடுத்துள்ளது., எனது கடமையை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டு அதனை செய்கிறேன்

திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என விஜய் சொன்னார் என்றால் அது எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றல்ல அது வேற இது வேற இது என் நாடு என் தேசம் இங்கு வாழுகிற மக்களுக்கான அரசியல் தமிழ் தேச அரசியல்

விஜய் மற்றும் எங்களது இரு வேறு கொள்கையும் ஒன்றாக இல்லை மற்றபடி சில நாங்கள் சொன்னதை சொல்கிறார். மொழிக் கொள்கையில் எங்களுக்கு முரண்பாடு உள்ளது. கொள்கை மொழி என்பது எங்கள் தாய் மொழி தான், பாடமொழி பயிற்றுமொழி எல்லா மொழியும் எங்களுக்கு தமிழ் மொழி தான். தேவையென்றால ஒரு மொழியை படித்துக் கொள்ளலாம் அதனை கொள்கையாக எடுத்துக் கொள்வது ஏற்க முடியாது.

விஜய்யை மக்கள் ஏற்பார்களா?

விஜய்யை மக்கள் ஏற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளதா? அதனைப் பொறுத்து தான் பார்க்க வேண்டும் கருத்தியல் புரட்சி மூலமாக தான் மக்களை வென்றெடுக்க முடியும் அதை நீங்கள் எந்த மாதிரியான கருத்துக்களை வைத்து ஒவ்வொன்றுக்கும்்பதில் அளிக்க வேண்டும்

என்னைபோன்று செய்தியாளர்களை சந்தித்து பதில் சொல்லி விளக்கம் அளிக்க தெரிய வேண்டும் ஒரு பிரச்சனைக்கு வேரும், தீர்வும் தெரிய வேண்டும்

பாஜக பாசிசம் திராவிட மடல் எதிரி என்ற விஜயின் பேச்சு குறித்த கேள்விக்கு, பெரியாரை ஏற்கும் போது திராவிடத்தை ஏற்கிறீர்கள் அதை தான் அவர்கள் ஏற்றுக்கொண்டு திராவிடமாடல் என்கிறார்கள் நாங்கள் அதனை திருட்டு மடல் தீஞ்சு போன மாடல் என்கிறோம்

திராவிடம் என்பது சமஸ்கிருதம் மாடல் என்பது ஆங்கிலம். தமிழ்நாட்டில் தமிழன் அறம் சார்ந்த ஆட்சி தமிழர் ஆட்சி என்று சொல்ல உங்களால் முடியவில்லை இது என்ன மாடல் இது.

ஆட்சியில் பங்கு என விஜய் பேசியதை விசிக நாதகவிற்கான அழைப்பாக பார்க்கலாமா? என்ற கேள்விக்கு, ஆட்சியிலும் பங்கு அதிகாரம் பங்கு என்பது நீண்ட நாள் உள்ள கோரிக்கை நாங்களும் அதை எழுப்பியதுதான்.

நான் வந்து மிகுந்த தெளிவான கொள்கை உடையவன் என் பயணம் என் கால்களை நம்பி தான் , உங்களுடைய கால்களை நம்பி பயணிக்க முடியாது

அடுத்தவர்கள் கால்களை நம்பி உங்கள் பயணத்தை தொடங்காதீர்கள் என தத்துவத்தை படித்தவன் நான் என்னுடைய இலக்கை நோக்கி பயணிக்கும்போது உங்களுடைய கால்களை நம்பி பயணிக்க முடியாது

நான் திருப்பத்தூர் போக வேண்டும் என்றால் நீங்கள் திருப்பூர் போனால் என் பயணம் வெற்றி அடையாது, என் இலக்கு என்ன என் பாதை என்ன என் நோக்கம் என்ன எனக்கு தெரியும் எனக்கென்று ஒரு கனவு என்பது என்னுடையது அல்ல என் முன்னோர்களுடைய கனவு அதை நிறைவேற்ற நான் போராடுகிறேன்

விஜய் முதலமைச்சர் ஆவாரா?

கொள்கை முரண்பாடு தாண்டி விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா? நான் தனித்துப் போட்டியிடுவேன் என சொல்லிவிட்டேன். என்னுடைய பயணம் ரொம்ப உறுதியானது நிலையானது.

நடிகர் முதலமைச்சர் ஆக முடியுமா விஜய் முதலமைச்சர் ஆக வாய்ப்புள்ளதா? அதை காலம் தான் தீர்மானிக்கும் மக்கள் கையில் தான் இருக்கிறது நாம் இப்போது அதை பேசிக் கொண்டிருப்பது தேவையில்லை .

நாங்கள் இலக்கை நோக்கி பயணத்தை தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறோம் தம்பி இப்போது வந்திருக்கிறார் அவரை வாழ்த்த வேண்டும்.

விஜய் பேச்சை முழுமையாக கேட்கவில்லை

பெரியாருடைய கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என விஜய் கூறுகிறார் என்ற கேள்விக்கு? விஜயின் பேச்சை முழுமையாக நான் கேட்கவில்லை.

ஆனால் சிறிது போனில் கேட்டேன் பெரியாரின் கடவுள் மறுப்பு ஏற்கவில்லை பகுத்தறிவை ஏற்கிறேன் என்கிறார் பகுத்தறிவு கொள்கையில் தான் கடவுள் மறுப்பும் உள்ளது பெண்ணிய உரிமையை ஏற்பேன் என்கிறார்

பெரியார் எங்களுக்கு பெண்ணிய உரிமையை போதிக்கவில்லை பெரியார் பிறப்பதற்கு முன்பாகவே எங்களுடைய முன்னவர்களின் முன்னுரிமை பெண்ணுரிமை தான், வேலு நாச்சியார் தான் பெண்ணுரிமையை முதலில் கொண்டு வந்தவர்

பெரியாரிடம் இருந்து தான் பெண்ணுரிமை வந்தது என்பதை நாங்கள் ஏற்கவில்லை வேலுநாச்சியாரிடம் இருந்துதான் பெண்ணுரிமை வந்தது

யாருடனும் கூட்டணி இல்லை

விஜய்யோடு நாதக கூட்டணி என்றுமே கிடையாது என புரிந்துகொள்ளலாமா? என்ற கேள்விக்கு, யாருடனும் எங்கள் கூட்டணி கிடையாது.

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி 1.14 % 4 லட்சம் வாக்குகள் வாங்கிய கட்சி உயிரோடு இருந்ததே இல்லை. தனித்து நின்று பாராளுமன்றத் தேர்தலில் வென்றவர் அம்மா அவர்கள் மட்டும்தான் 37 இடம். அதன் பின்பு தனித்து நின்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி தேமுதிக. அதனைப் பின்பு நான் தான் தனித்து நின்று வாக்குசதவிதம் பெற்றுள்ளேன்.

5 முறை தோற்றும் ஆறாவது முறையும் தனித்து போட்டியிடுகிற கட்சி என்று இருந்தால் வரலாற்றில் அது நாம் தமிழர் கட்சி தான்.

நான் பிசினஸ்மேன் கிடையாது

சீமானுக்கு முதலமைச்சர் ஆசை இல்லையா? முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதல்ல
முதலமைச்சராகி என்னென்ன செய்ய வேண்டும் என்கிறது தான் லட்சியம்

முதலமைச்சர் ஆவதி, பதவிக்க வருவது நாலு சீட்டு அடைவது 500 கோடியை வாங்குவது 50 சீட்டை வாங்க நான் வரவில்லை நான் வியாபாரம் செய்ய வந்தவன் அல்ல நான் விடுதலைக்கு போராட வந்தவன் நான் பிசினஸ்மேன் அல்ல.,

2026 தேர்தல் பணி குறித்த கேள்விக்கு ? நான் எப்போதே தொடங்கிவிட்டேன். விஜய் உதயநிதி ஸ்டாலின் என தேர்தல் களம் மாறுமா? என்ற கேள்விக்கு;- நாங்கள் எல்லாம் குறுக்க கோடு போட்டு ஆடிக் கொண்டிருப்போமா என்றார்.

விஜய்யை பார்த்து பயமா?

யார் விஜயை பார்த்து பயப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு? யாரும் பயப்பட மாட்டார்கள். என்னை பார்த்து பயப்படுகிறார்கள் என்றால் இந்திய திராவிட என்ற கோட்பாட்டிற்கு எதிரானவன் நான் இது இரண்டுமே என் இனத்திற்கு எதிரானது. திராவிடம் என்பது இந்தியத்தின் கூட்டாளி, இதனை நான் சொல்லவில்லை

முத்துராமலிங்கத் தேவர் ஆரியமும் திராவிடமும் வெவ்வேறு அல்ல ஒன்று தான்,ஒரு நாள் கட்டிப்பிடித்து கைகுலுக்கு சங்கமிப்பார்கள் என்று கூறியிருக்கிறார்

நான் தமிழன் என்றவுடன் இருவரும் ஒரே நேரத்தில் எதிர்க்கிறார்கள் கோட்பாட்டு அளவில் நாங்கள் இந்திய அரசியலில் திராவிட அரசியலுக்கு எதிரானவர்கள்

ஏனென்றால் திராவிடம் எங்களுடன் தமிழ் பேசிக்கொண்டு என் மொழியை அழிக்கும். தமிழர் , தமிழர் உரிமை என பேசிக்கொண்டு எங்களுடைய உரிமையை அழிக்கும் சிதைக்கும்

மக்களை பாதிக்கும் தொழிற்சாலைகளை கொண்டு வந்தது யார் திணித்தது யார் காங்கிரஸ் பாஜக தான்.இவைகளை எதிர்ப்பும் இல்லாமல் காலூன்ற அனுமதித்தது திமுக தான். நல்ல கொள்கை உள்ள சீமான் ஆட்சிக்கு வருவரா?

என்னைப்போல ரூபாய் கொடுக்காமல் எத்தனை ஆயிரம் மக்கள் கூடுகிறார்கள் இவர்களுக்கு எல்லாம் காசு கொடுக்காமல் கூட்டம் வருமா? இவரகளுக்கு சொந்த கட்சிக்காரன் காசு கொடுக்காமல் ஓட்டு போடமாட்டான்.

ஒரு ஓட்டுக்கு கூட காசு கொடுக்காம 36 லட்சம் ஓட்டு வாங்கி இருக்கிறேன் என் கட்சி வேட்பாளர்கள் வாரிசுகள் அல்ல; எளிய மக்களை தேடி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறோம் , நீங்கள் வாக்கை பெறவில்லை வாங்குகிறீர்கள் பர்செஸ் பண்ணுகிறீர்கள்

தவெக கொள்ளை எதிரியா?

பாஜக திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றியபோல 8% சீமான் 32 விழுக்காடு வந்து ஆட்சியை கைப்பற்ற முடியாதா? தவெக கொள்கை எதிரியா? அண்ணனுக்கும் தம்பிக்கும் என்ன பகை இருக்கிறது.நான் திராவிடத்தை முன்னெடுக்கவில்லை. தமிழ் தேசியம் திராவிடமும் இரு கண்கள் என்கிறார் விஜய் அப்படி சொல்ல முடியாது திராவிடம் தமிழ் தேசியத்திற்கான கொடிய புண் . திராவிடம் தீது திராவிடம் தமிழருக்கு அயன்மை இந்தியம் எப்போதும் எதிர்மை தமிழன் மட்டுமே இயன்மை

தவெகவுடன் பயணிப்பீர்களா? என் பயணம் வேறு அவர் பாதைபயணம் வேறு என் பாதையை முடிவு செய்து என் இலக்கை முடிவு செய்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றார்

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 127

    0

    0