செய்தியாளர் சந்திப்பில் திடீரென சரிந்து விழுந்த சீமான்.. உடனே வந்த ஆம்புலன்ஸ்… அதிர்ந்து போன தொண்டர்கள்…!!!

Author: Babu Lakshmanan
2 April 2022, 12:47 pm

சென்னை – திருவொற்றியூர் அருகே செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்தார்

சென்னையை அடுத்து திருவொற்றியூரின் அண்ணாமலை பகுதியில் ரயில்வேட் பகுதியை கடப்பதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக 117 வீடுகள் அகற்றப்படுவதாக ரயில்வே துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. மாற்று இடங்கள் வழங்கப்படுவதற்கு முன்பாக வீடுகளை அகற்றுவற்கு அப்பகுதி மக்கள் கடந்த 2 தினங்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக்களை கேட்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு சென்றிருந்தார். அப்போது, மக்களின் குறைகளை கேட்ட பிறகு, செய்தியாளர்களை சந்திக்க முயன்றார்.

அந்த சமயம் திடீரென சீமான் மயங்கி சரிந்து விழுந்தார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் சரிந்து விழும் போது, உடன் இருந்த நிர்வாகிகளை அவரைத் தாங்கி பிடித்துக் கொண்டனர். பின்னர், தண்ணீர் கொடுக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து 108 ஆம்புன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 1537

    0

    0