பேனா வைப்பீங்க, கீழ நோட்டு வைப்பீங்க.. இதெல்லா யாரோட காசு? முதலமைச்சர் ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த சீமான்.. வைரல் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2022, 10:04 pm

தமிழக அரசு ரூ.80 கோடி செலவில் மெரினாவில் நடுக்கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் விருப்பமான பேனா சின்னத்தை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

நடுக்கடலில் அமைக்கப்படும் ‘பேனா’ நினைவுச்சின்னத்துக்கு 290 மீட்டர் நிலப்பரப்பிலும், 360 மீட்டர் கடலின் மேலேயும் செல்லும் வகையில் 650 மீட்டர் நீளத்தில் பிரமாண்ட இரும்பு பாலம் நிறுவப்படுகிறது. கடல் அலைகள் எழும்பும் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்தில், 7 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ள இரும்பு பாலத்தில் பார்வையாளர்கள் கடலின் அழகை ரசித்தவாறு நடந்து செல்வதற்கு ஏதுவாக கண்ணாடியிலான பாதை வசதிகளும் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட சீமானிடம், தமிழக அரசின் பிரம்மாண்ட பேனா சின்னம் அமைக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பட்டது. அப்போது பேசிய சீமான், நான் இருக்கும் வரை அந்த திட்டம் நிறைவேறாது, நான் இருக்கும் வரை நடக்காது.

கண்ணாடி வைப்பீங்க, பேனா வைப்பீங்க,கீழ நோட்டு வைக்கறனு சொல்லுவீங்க.. ஒரு வேளை உதயநிதி முதல்வர் ஆனால், எங்க அப்பா விக் வச்சாருனு அதையும் வைப்பீங்க.. இதெல்லா தேவையில்லாத வேல.. யாரோட காசு? சமாதில வடை, காபி விக்கறதையே நான் திட்டுறேன் என நக்கலாக பதிலளித்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சீமான் கருத்துக்கு நெட்டிசன்கள் ஷேர் செய்து விமர்சித்து வருகின்றனர்.

  • pavni reddy condition on amir for marriage மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?