கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயரை வைத்ததற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: திமுக அரசு தொலைநோக்கானதா? சென்னையில் தலைநகரில் பெருமாநகரில் ஒரு பேருந்து நிலையம் இருக்கிறதா? இருந்தது ஒன்று. அதையும் மூடிவிட்டீங்க இல்லையா? சென்னை பெருமாநகரில் ஒரு பேருந்து நிலையம் இருக்கிறதா? ரூ110 கோடி செலவழிச்சு கட்டுனீங்கதானே.. இப்ப அதை என்ன செய்ய போறீங்க? வணிக வளாகம்.. லூலூவுக்குதானே.. லூலூ மாலுக்கு கொடுக்கத்தானே இந்த வேலையை செய்றீங்க?
40 கிமீ தொலைவில் பேருந்து நிலையமா? கிளாம்பாக்கத்தில் இறங்கி எப்படி இங்க வருவது? கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டுனீங்க..இப்ப மதில் சுவரை இடிக்கிறீங்க.. யாரு கேட்டது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்? அதுல 70% அதிமுக செய்துவிட்டது.. நீங்க ரூ18 கோடியோ, ரூ20 கோடியோ போட்டு முடிச்சுவிட்டு விட்டு உதயசூரியன் சின்னம் எதுக்கு அதுல? தம்பி உதயநிதி கேட்கிறாரே, உங்க அப்பன் வீட்டு காசான்னு? நான் கேட்கிறேன்.. இது என்ன உங்க அப்பன் வீட்டு காசா? உங்க தாத்தா வீட்டு காசா? எதுக்கு உங்க தாத்தா பேரை வைக்கிற?
இந்த நாட்டுல கருணாநிதியை விட்டா தலைவனே இல்லையா? எங்களுக்கு யாருமே இல்லையா? எழுதுனா அவருதான் எழுதினார்.. அதுக்கு ஒரு பேனா வைக்கனும்.. மருத்துவமனையா? அவரு பெயரு.. ஏன் முத்துலட்சுமி ரெட்டி பெயரை வைக்க முடியாதா? முதன் முதலில் மருத்துவம் படித்த பெண் பெயரை வைக்க கூடாதா? நூலகத்துக்கு தாத்தா பாண்டிதுரைத் தேவர் பெயரை வைக்கக் கூடாதா? 4-வது தமிழ்ச் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தவர் பாண்டித்துரை தேவர்.. அவர் பெயர் வைக்கக் கூடாதா?
ஜல்லிக்கட்டு நடத்த நாங்க கேலரி கேட்டோமா? நாங்க ஜல்லிக்கட்டு வரும் போது கட்டையை கட்டி ஓடவிட்டுட்டு அப்புறம் கழற்றிவிட்டுப் போய்விடுவோம். அதுக்கு எதுக்கு அவ்வளவு கோடியில் செலவு? கட்டிடம்? அதுக்கும் உங்க அப்பா பேருதானா? எதுக்கு தமிழ்நாடுன்னு பேரை வெச்சுகிட்டு.. தூக்கிரு.. கருணாநிதி நாடுன்னு பேரு வையுங்க.. கேட்டா செருப்பை கழற்றி அடி, என ஆவேசமாக கூறினார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.