ஸ்டாலினுக்கு கோபம் வருதோ இல்லையோ..? எனக்கு கோபம் வருது ; எங்களுக்கு ஒரு 5 ஆண்டுகள் வாய்ப்பு கொடுங்க ; சீமான்!!

Author: Babu Lakshmanan
26 September 2023, 8:28 pm

பாஜக – அதிமுக பிரிவை நிரந்தரமாக பார்க்கிறேன் என்றார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தஞ்சாவூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- பாஜக – அதிமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ளது விரிசல் அல்ல. அது, முறிவாக பார்க்கிறேன். அதை தற்காலிக பிரிவாக பார்க்கவில்லை. நிரந்தர பிரிவாகவே பார்க்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின் கர்நாடகவில் காங்கிரஸ் கட்சிக்கு வேலை செய்தார். கர்நாடகாவில் உள்ளவர்கள் தி.மு.க வெற்றிக்கு உழைப்பார்களா, அங்கு உங்களை கேலி செய்கிறார்கள். உங்களுக்குக் கோபம் வருகிறதோ இல்லையோ எங்களுக்கு கோபம் வருகிறது. ஆனால், தமிழ் மண்ணின் முதல்வரை அவமதிப்பது எங்களுக்கு தன்மான இழுக்காகத் தெரிகிறது. இது எங்களுக்குக் கோபமாய் வருகிறது.

ஒரு நாட்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு சட்டத்திட்டங்கள் என்றால், இத்தனை மாநிலங்கள் ஏன் ஒன்றாக இருக்க வேண்டும். தமிழகம், கர்நாடகம் என தனித்தனியாகப் பிரித்து விட வேண்டும். தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு மாற்றி, மாற்றி 60 ஆண்டுகள் கொடுத்திருக்கிறீர்கள். எனக்கு ஐந்து ஆண்டுகள் கொடுங்கள். அறிவை வளர்க்கும் கல்வி தரமில்லை. கல்வி ஒரு சந்தையாக இருக்கிறது. உயிரைக் காக்கும் மருத்துவம் தரமில்லை. எனது திட்டம் முதலில் நீர், வயிறு, அறிவு, மருத்துவம் சமமானதாக கிடைத்தல், அதன் பயனாக வேலைவாய்ப்பு இதற்காகத்தான் போராடி வருகிறோம்.

மருத்துவப் படிப்பில் முதுநிலைப் படிப்புக்கு மட்டுமல்லாமல், எம்.பி.பி.எஸ். படிப்புக்கும் நீட் தேர்வை ஹீரோவாக ஆக்க வேண்டும். நீட் தேர்வு தோல்வி அடைந்துவிட்டது என்பது மத்திய அரசுக்கு தெரிந்து விட்டது. நீட் தேர்வு தரமான மருத்துவரை உருவாக்காது. தரமான மருத்துவரை சாகடிக்கும். தெரிந்த பிறகும் எதற்காக நீட் தேர்வு இருக்கிறது. எனவே, நீட் தேர்வை மொத்தமாகவே ஜீரோவாக ஆக்குவது நல்லது.

காங்கிரஸ் கட்சி இந்த நாட்டை மிக அதிகமாக 50 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. அப்போது செய்யாத ஜாதிவாரி கணக்கெடுப்பை, தற்போது ஆட்சிக்கு வந்தால் செய்யப் போவதாக செய்யப்படும் என ராகுல் காந்தி கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், அங்கு ஜாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் கட்சி நடத்திக் காட்ட வேண்டும், என்றார்.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!