பள்ளி, மருத்துவமனை எல்லாம் தனியார் கிட்ட… சாராயக்கடை நடத்துவதுக்கு தான் அரசுக்கு வேலையா..? சீமான் கேள்வி…!!!

Author: Babu Lakshmanan
6 April 2024, 12:40 pm

பிரதமருக்கான தேர்தலா..? புரோக்கர்களுக்கான தேர்தலா…? என்று சிந்தித்து பாருங்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மீஞ்சூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திருவள்ளூர் பாராளுமன்ற வேட்பாளர் ஜெகதீஸ் சந்தர் அவர்களை ஆதரித்து ஒலி வாங்கி சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும் படிக்க: தாமரையை தின்னாச்சு… இரட்டை இலையை மென்னாச்சு ; TVS XL-லில் சென்று மன்சூர் அலிகான் அட்ராசிட்டி பிரச்சாரம்…!!!

அப்போது, தேர்தல் பரப்புரையில் சீமான் பேசியதாவது :- 100 நாள் வேலை திட்டம் மூலம் எத்தனை மரங்களை நட்டு வைத்தீர்கள், சொல்லுங்கள். எத்தனை ஏரி குளங்களை தூர்வாரினீர்கள். இதனால் விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது. சும்மா இருப்பதற்கு பணம் கொடுக்கிறார்கள். இது ஒரு நாடா..? பீகார், உத்திர பிரதேசம் என வட இந்தியர்கள் அனைத்து வேலைகளிலும் தமிழகத்தில் வந்து விட்டனர். அனைத்து இடங்களிலும் இந்தி தங்கிலீஷ் தான் உள்ளது.

தமிழில் பெயர்கள் இல்லை. இது தமிழ்நாடா..? இது சுடுகாடு..? இதை மாற்றுவதற்காக தான் துடிக்கிறேன், அவர்களுக்கு இங்கு வாக்குரிமை கொடுத்தால் வட இந்தியன்தான் ஆட்சியை தீர்மானிப்பான். இந்தியை எதிர்க்கிறோம் எனக் கூறி திராவிட கட்சிகள் இந்தியில் வாக்கு சேகரிக்கின்றனர்.

வடஇந்தியர் உன் இடத்தை ஆக்கிரமித்து விரட்டுவான். உரிமைகளை போராடித்தான் பெற வேண்டும். அதற்கான போர் தான் இது. தனியார் பள்ளி, தனியார் மருத்துவமனை என்றால், அரசு எதற்கு..? சாராயக்கடை நடத்துவது தான் அரசா..? அதற்குத்தான் ஓட்டு போடுகிறோமா..? இது பிரதமருக்கான தேர்தலா..? புரோக்கர்களுக்கான தேர்தலா..? சிந்தித்து பாருங்கள்.

மேலும் படிக்க: ‘நீங்க ஓட்டு மட்டும் போடுங்க’… திருச்சிக்கு இணையாக புதுக்கோட்டையை மாற்றுவோம் ; அமைச்சர் கேஎன் நேரு உறுதி..!!!

இந்தியா மூன்று இந்தியாவாக உள்ளது. மழை நீரை வெளியேற்றவும், மழை நீரை சேமிக்கவும் வழியில்லை. பரந்தூரில் 5000 ஏக்கர் விமான நிலையம் எதற்கு..? சொந்தமாக ஒரு விமானம் கூட இல்லாத நிலையில் ஒரு நாட்டிற்கு எந்த மயிருக்கு விமான நிலையம்..?, என கடுமையாக விமர்சனம் செய்தார்

அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம் எதற்கு..? செயற்கையாக துறைமுகத்தை உருவாக்க வேண்டும். கன்னியாகுமரியில் இருந்து 80 லட்சம் டன் மலை கற்களை கொண்டு வந்து கொட்டியுள்ளனர். கேரளாவில் மலையை வெட்ட தடை விதித்ததால் கன்னியாகுமரியில் இருந்து கற்களைக் கொண்டு வந்து கொட்டியுள்ளனர்.

மலையை ஜீபூம்பாவில் வர வைக்க முடியுமா..? உங்களுக்கு மலையை அழிக்கும் உரிமை யார் கொடுத்தது..? எல்லா துன்பங்களையும் திறக்கும் சாவி ஆட்சி அதிகாரம் தான், இதனை புரிந்து கொள்ளுங்கள், என்றும் அவர் தெரிவித்தார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!