பாலியல் குற்றம் செய்ததை ஜோதிமணி பார்த்தாரா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக காங்கிரஸ் கட்சியினருக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மோதல் ஏற்பட்டது. பேரறிவாளனின் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது குறித்து சீமான் கடுமையாக விமர்சித்தார். மேலும், காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரியின் பேச்சையும் விமர்சித்து பேசியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினரும் சீமானுக்கு பதிலடி கொடுத்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என ஜோதிமணி விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக முத்துநகர் படுகொலை என்ற ஆவணப்படத்தை படக்குழுவினருடன் சீமான் பார்த்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தூத்துக்குடி துப்பாக்கி சூடு மூலமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. எவராவது கைக்குழந்தைகளை அழைத்துக்கொண்டு கலவரத்திற்கு வருவார்களா? அப்படி குழந்தைகளுடன் அறவழியில் போராட வந்தவர்கள்தான் போலீஸ் சுட்டுத் தள்ளியது. பேருந்தை கொளுத்தியது, பின்னர் கலவரத்தை செய்தது காவல்துறை தான்.இதே நாம் தமிழர் ஆட்சியாக இருந்தால் யாராக இருந்தாலும் விட்டிருக்க மாட்டோம், என்றார்.
அப்போது, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பாலியல் குற்றவாளி என விமர்சித்ததை பற்றி கேள்வி எழுப்பியதற்கு சீமான் பதிலளித்ததாவது :- சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து இந்திய ராணுவம் தமிழ்ப் பெண்களை வன்புணர்வு செய்து கொன்றது. அதற்கு காரணமாக இருந்தவர் பாலியல் குற்றவாளிகள் ராஜீவ் காந்திதான். ஏன் அதைப் பற்றி எல்லாம் ஜோதிமணி பேசவில்லை.
நான் பாலியல் குற்றம் செய்தேன் என்பதை ஜோதிமணி பார்த்தாரா? உங்களை தங்கச்சி என்பதைத் தவிர வேறு கூறவில்லை. பாலியல் குற்றவாளி உங்க ஆளு ராஜீவ்காந்தி தான் என காட்டமாக விமர்சித்தார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.