வக்பு வாரிய சொத்து தொடர்பான அறிவிப்புக்கு பின்னணியில்”ஜி-ஸ்கொயர்” நிறுவனம் உள்ளதாகவும், அந்த நிறுவனம் தமிழகத்தில் நிலங்களை வாங்கி குவிப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினுடைய ஏற்பட்ட தகராறு தொடர்பாக மதிமுக சார்பில் வழக்கும், காவல்துறை ஒரு சார்பில் வழக்கும் பதியப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் இன்று விசாரணைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- புதிய கல்விக் கொள்கையால் அனைத்து தேசிய இனங்களின் மொழிகளும் அழியும். அவர்களின் நோக்கம் இந்தி, சமஸ்கிருதத்தை வளர்ப்பது தான். புதிய கொள்கை குழந்தைகளுக்கான மரண சாசனம்.
நீட் தேர்வுக்கு முன்பாகவே நல்ல மருத்துவர்கள் உருவாகி இருக்கிறார்கள். பிரதமர் மோடிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவம் பார்ப்பது ஏற்கனவே இருந்த மருத்துவர்கள் தானே, எ எனக் கூறினார்.
உக்ரைன் போரினால் மருத்துவம் படித்த மாணவர்கள் பாதியிலேயே இந்தியா வந்தவர்கள், இந்தியாவில் படிப்பு தொடர் முடியாது என்று மத்திய அரசு கூறியிருக்கிறது என்ற கேள்விக்கு, இந்தியாவில் படிக்காமல் இருப்பதே நல்லது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வக்பு வாரிய சொத்து தொடர்பான அறிவிப்புக்கு பின்னணியில்”ஜி-ஸ்கொயர்” நிறுவனம் உள்ளது. அவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள சொத்துக்களை வாங்கி குவிக்கிறார்கள். இனிமேல் வரும் அரசாங்கம் ஏதும் இடம் தேவை என்றாலும், அவர்களிடம் இருந்து தான் வாங்க வேண்டும். “ஜி- ஸ்கொயர்” சொத்துகள் குறித்த வில்லங்கம் வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக தான், பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழ் பெறமுடியாத நிலையை அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள், எனக் கூறினார்.
மதங்கள் இல்லை என்று சொல்பவரை செருப்பால் அடிப்பேன் என்று நடிகர் மயில்சாமி கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “மதங்கள் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. எது தங்கள் சமயக் கோட்பாடு என்பதில் தான் வேறுபாடு உள்ளது,” என தெரிவித்தார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.