சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்… தோலுரித்து விடுவோம்.. காங்., எம்.பி. ஜோதிமணி எச்சரிக்கை
Author: Babu Lakshmanan24 May 2022, 2:00 pm
கரூர் : கரூர் பாராளுமன்ற தொகுதி பொதுமக்களிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கரூரில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- ராஜிவ் காந்தியை முன்னாள் பிரதமர் என்று பாராமல் சீமான் பேசியதற்கு பதில் தெரிவித்திருந்தேன். விஜயலக்ஷ்மி ஆதாரத்தோடு சீமான் மீது புகார் கூறியிருந்தார். அதையே நான் கூறினேன். ஆனால், தனிப்பட்ட முறையில் என்னை தாக்கும் நோக்கத்தோடு பேசுகிறார். அவர் நேர்மையானவராக இருந்தால் நீதிமன்றத்தை நாடி மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கலாம்.
பெண்கள் மீது ஆபாச தாக்குதல், அவதூறு பரப்பினால் என்னை போன்ற பெண்களை அரசியலை விட்டு விரட்டலாம் என்று சீமான் போன்றவர்கள் நினைக்கிறார்கள். இந்த மாதிரியான தாக்குதல்கள் எனக்கு புதிதல்ல பாரதிய ஜனதா கட்சியிலும் எனக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தாக்குதல்கள் நடந்து வருகிறது. சீமான் பாஜகவின் B டீம்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் மானங்கெட்டு ஜோதிமணிக்கு வாக்களித்ததாக பேசிய சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். கருத்து முரண்பாடு காரணமாக நாம் தமிழர் கட்சியில் உள்ள உறுப்பினர்கள், சீமான் போன்ற ஆபாச வக்கிர அரசியல்வாதிகளை பின்பற்றி, தவறான பாதைக்கு சென்று விடக்கூடாது. எனவே, சீமான் போன்ற நபர்களை தொடர்ந்து தோலுரிக்கும் பணியை செய்வோம், என்று தெரிவித்தார்.