சீமான் அண்ணனுக்கு சின்னமும் இல்ல.. ஓட்டும் இல்ல ; ஸ்லீப்பர் செல் குறித்து அண்ணாமலை தடாலடி!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2024, 2:43 pm

சீமான் அண்ணனுக்கு சின்னமும் இல்ல.. ஓட்டும் இல்ல ; ஸ்லீப்பர் செல் குறித்து அண்ணாமலை தடாலடி!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரை மேலூரில், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி தலைவர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசுகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து தனது கருத்துக்களை முன்வைத்தார்.

அவர் பேசுகையில், என்னென்னமோ சொல்லிவிட்டு கடைசியாக, என் மண் என் மக்கள் , தமிழ் தேசியம் என பேச ஆரம்பித்து விட்டார் அண்ணாமலை. அது என் தம்பி தான். நான் தான் ஸ்லீப்பர் செல்லாக அங்கு அனுப்பி வைத்துள்ளேன். இரண்டு பேரும் ஒரே எண்ணங்களுடன் பயணித்து வருகிறோம். ஒவ்வொரு முறை அவன் பேசும்போதும் என்னை உலக புகழ் அடைய வைத்து விடுகிறான். ஒரே ரத்தம் ரெண்டு பேருக்கும். தமிழ் ரத்தம் என சீமான் மதுரையில் பேசியிருந்தார்.

மேலும் படிக்க: கச்சத்தீவு பற்றி பேச தகுதியில்ல.. மோடி ஆட்சியால் 2 பேர் நல்லா இருக்காங்க.. லிஸ்ட் வெளியிட்ட சி.வி சண்முகம்!!

அண்ணாமலையை தனது ஸ்லீப்பர் செல் என்று சீமான் கூறிய செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி இருந்தது. இதுகுறித்து இன்று கோவையில் நடைபெற்ற பிரச்சார நிகழ்வில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பதில் கூறினார்.

அதில், இப்போ சீமான் அண்ணனுக்கு சின்னமும் இல்லை. ஓட்டும் இல்லை. அதுனால என்ன பத்தி பேசுகிறார். இப்போ இளைஞர்கள் , தாய்மார்கள் எல்லாம் பாஜக பக்கம் இருக்கிறார்கள். பாஜக தனித்து களத்தில் நிற்கிறது. மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிபார்கள். மீண்டும் பிரதமர் மோடி தான் ஆட்சிக்கு வருவார்கள். இதெல்லாம் அனைவருக்கும் தெரியும். அதுனால எல்லாரும் இப்படித்தான் பேசுவாங்க அதெல்லாம் கண்டுக்காதீங்க என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…