சீமானின் மனைவிக்கு கட்சியில் புதிய பதவி.. குடும்ப அரசியலில் நுழைந்தது நாம் தமிழர் கட்சி : விளாசும் நெட்டிசன்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2024, 2:41 pm

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் இருந்து வருகிறார். இவரது மனைவி கயல்விழி. தமிழ் தேசியத்தை வலியுறுத்தி அரசியல் நடத்தி வரும் சீமான், திமுக, அதிமுக பாஜக கட்சிகளை அவ்வப்போது கடுமையாக விமர்சித்து வருகிறார்.

2024 தொடங்கியது முதலே அக்கட்சிக்கு ஏழரை ஆரம்பித்தது என்றே சொல்லலாம். அண்மையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தியது அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதே போல நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகி வருவது சீமானுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பது அரிதாகவே உள்ளது. இதனால் அவர் நீதிமன்ற படியேறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சி சின்னம் முடக்கம், நிர்வாகிகள் விலகல், என்ஐஏ குடைச்சல் என அடுத்தடுத்து சோதனை மேல் சோதனை வந்தாலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்.

இந்த நிலையில் கட்சியில் அவரது மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுளள்து. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழிக்கு தென்சென்னை மக்களவைத் தொகுதியின் இரண்டு சட்ட ஆலோசகர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடும்ப அரசியலை கடுமையாக விமர்சனம் செய்து வரும் சீமான் மனைவி, மைத்துனர் ஆகியோருக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கியத்துவம் கொடுத்து வருவது குடும்ப அரசியல் இல்லையா என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 251

    0

    0