ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர் விற்பனை? கூகுள் பே வசதியும் அறிமுகம் : தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan2 September 2022, 5:49 pm
ரேசன் கடைகளில் யுபிஐ வசதி மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், 2 கிலோ, 5 கிலோ காஸ் சிலிண்டர் விற்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள ரேசன்கடைகளில் கூகுள் பே, பே டிஎம் உள்ளிட்ட யுபிஐ வசதி மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
முதல்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 ரேசன் கடைகளை மாதிரி ரேசன் கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். படிப்படியாக அனைத்து ரேசன் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
ரேசன் கடைகளில் 2 கிலோ, 5 கிலோ காஸ் சிலிண்டர் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் ஒரு கிராம பஞ்சாயத்தில் குறைந்தபட்சம் 2 ரேசன்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எவர்சில்வர் கொள்கலனில் வைத்து விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
0
0